ரிம40 மில்லியன் கையூட்டு பெற்றதாக அமைச்சரின் அரசியல் உதவியாளர் கைது

maccமலேசிய  ஊழல்தடுப்பு   ஆணையம்  (எம்ஏசிசி)   இன்று   பிற்பகல்  புத்ரா  ஜெயாவில்,     சரவாக்கைச்  சேர்ந்த   கூட்டரசு   அமைச்சர்   ஒருவரின்   அரசியல்    செயலாளரைக்  கைது   செய்தது.

அந்த  61-வயது   ஆடவர்  “டத்தோ”  பட்டம்  பெற்றவர்,  2013   ஜூன்   முதல்   நாளிலிருந்து   அமைச்சரின்   உதவியாளராகப்    பணிபுரிந்து     வருகிறார்.

அவர்  கைது   செய்யப்பட்டதை   பினாங்கில்   ஊழல்- எதிர்ப்பு   நிகழ்வு  ஒன்றில்   கலந்துகொண்டிருக்கும்    எம்ஏசிசி  தலைமை     ஆணையர்   சுல்கிப்ளி   அஹ்மட்  உறுதிப்படுத்தினார்.

அந்நபரின்  அமைச்சின்கீழ்   செயல்படும்   ஒரு   ஜிஎல்சி(அரசுத்  தொடர்பு   நிறுவனம்)-யிடமிருந்து   ரிம40 மில்லியன்  கையூட்டு பெற்ற  குற்றத்துக்காக    அவர்  கைது   செய்யப்பட்டதாக   சுல்கிப்ளி   தெரிவித்தார்.