வட கொரியா செல்ல மலேசியர்களுக்குத் தடை

koreaவட  கொரிய   ஏவுகணைச்    சோதனைகளால்    மலேசியர்கள்  அந்நாட்டுக்குச்  செல்ல   புத்ரா  ஜெயா  தடை   விதித்துள்ளது.

“ஏவுகணைச்   சோதனைகளைத்    தொடர்ந்து     கொரிய  தீவகற்பத்தில்  பதற்றநிலை        அதிகரித்திருப்பதால்  இம்முடிவு  எடுக்கப்பட்டது.

“நிலைமை  வழக்கத்துக்குத்   திரும்பியதும்   பயணத்தடை   மீள்பரிசீலனை    செய்யப்படும்”,  என  விஸ்மா   புத்ரா   ஓர்    அறிக்கையில்    கூறியது.

ஆனால்,  வட  கொரியர்கள்   மலேசியாவுக்கு  வந்துபோவது  குறித்து    அறிக்கை    எதுவும்   குறிப்பிடவில்லை.

மேம்பாடடைந்த   நாடுகள்   வட  கொரியாவை    ஓரங்கட்டி    வைத்திருந்தாலும்   மலேசியா    அந்நாட்டுடன்   சுமூக   உறவுகளைக்   கொண்டிருக்கிறது.  வடகொரியாவுக்கு   விசாயின்றி  செல்வதற்கு    அனுமதிக்கப்படும்     மிகச்  சில   நாடுகளில்    மலேசியாவும்   ஒன்று.  அதேபோல்   பியோங்யாங்கில்  தூதரகம்   வைத்துள்ள   24  நாடுகளில்   மலேசியாவும்  ஒன்று.