வேதமூர்த்தியை ஹரப்பான் ஏற்றுக்கொள்ளக்கூடாது, ஹிண்ட்ராப் ஆர்வலர்கள் வேண்டுகோள்

 

Hindrafno1பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா (ஹிண்ட்ராப்) அமைப்பின் தலைவர் பி. வேதமூர்த்தியுடனான எவ்வித ஒத்துழைப்பையும் பக்கத்தான் ஹரப்பான் நிராகரிக்க வேண்டும் என்று ஹிண்ட்ராப் இயக்கத்தின் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேதமூர்த்தி அடிமட்ட இந்தியர்களின் ஆதரவை இழந்து விட்டார் என்று அவர்கள் கூறுகின்றனர்.

வேதமூர்த்திக்கு எதிரான அவர்களின் எதிர்ப்பை முறைப்படி தெரிவிக்க அவர்கள் ஹரப்பான் தலைவர்களைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் அவர்களின் பேச்சாளர் எஸ். ஜெயதாஸ் இன்று கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“அவரும் (வேதமூர்த்தியும்) அவரது பிரிந்து போன ஹிண்ட்ராப்பினரும் இந்தியச் சமூகத்தினரின் பரவலான ஆதரவைப் பெற்றிருப்பதாக பி. வேதமூர்த்தி கூறிக்கொண்டது குறித்து நாங்கள் கவலையுறுகிறோம்.

“இதன் அடிப்படையில் அவரது பிரிந்து போன ஹிண்ட்ராப்பினரை கூட்டணியின் (ஹரப்பான்) ஓர் அங்கமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்”, என்று ஜெயதாஸ் கூறினார். அவருடன் இன்னும் ஐந்து ஹிண்ட்ராப் ஆதரவாளர்களும் இருந்தனர்.

வேதமூர்த்தியின் தலைமையின்கீழ் ஹிண்ட்ராப் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவை விளக்கிய ஜெயதாஸ், 13ஆவது பொதுத்Hindrafno3 தேர்தலுக்கு முன்னர் பிரதமர் நஜிப்புடன் “ஹிண்ட்ராப்-பிஎன் இந்தியச் சமூகத்திற்கான ஐந்து-ஆண்டு பெருந்திட்டம்” கையொப்பமிட்ட பின்னர் வேதமூர்த்தி இந்தியர்களின் ஆதரவை இழந்து விட்டார் என்றார்.

“அவர் (வேதமூர்த்தி) அதை (பிஎன்னை ஆதரித்தது) ஒரு தவறு என்று ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அத்தவறுக்காக அவர் வருத்தப்பட்டதில்லை”, என்று ஜெயதாஸ் மேலும் கூறினார்.

ஹரப்பானுடன் ஒத்துழைக்க விரும்புவதாக கூறும் வேதமூர்த்தி, டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோவுக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக கூறுவதின் நோக்கம் என்ன என்று ஜெயதாஸ் வினவினார்.