தியன் சுவா சிறைக்குப் போகத் தயார்

 

Tianchuajail2012 ஆம் ஆண்டில், பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா கட்டுப்படுத்தப்பட்ட போலீஸ் பயிற்சி மையத்திலிருந்து போகும்படி போலீஸ் விடுத்த உத்தரவுக்குப் பணியாத குற்றத்திற்காக அவருக்கு நீதிமன்றம் ஒரு மாதச் சிறைத் தண்டனையும் ரிம1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

அத்தண்டனையை எதிர்த்து தியன் சுவா மேல்முறையீடுகள் செய்திருந்தார். நாளை, மேல்முறையீட்டு நீதிமன்றம் அதன் தீர்ப்பை வழங்கவிருக்கிறது.

மலேசியாகினி அவரை தொடர்புகொண்ட போது, “அது குறித்து அதிகமாகக் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. நாளை சிறையிலடைக்கப்படுவேன் என்று நான் நினைக்கிறேன்”, என்றாரவர்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினரான தியன் சுவா அவரது நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழக்கும் மற்றும் அடுத்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுக்கப்படும் சாத்தியம் குறித்து தாம் கவலைப்படவில்லை என்று மேலும் கூறினார்.

ஒரு குற்றத்திற்காக ரிம2,000க்கு கூடுதலான அபராதம் அல்லது ஓர் ஆண்டுக்கு மேலான சிறைதண்டனை விதிக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அவரது தேவான் ரக்யாட் இருக்கையை இழப்பதுடன் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அந்த அவையின் உறுப்பினராவதற்கு போட்டியிட முடியாது.