கட்கோ நில விவகாரம் தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் 5 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.), விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் அஷிஷா அஹ்மாட், தடுப்புக்காவலுக்கு அனுமதி அளித்தார்.
54 வயதான அந்த முன்னாள் வங்கி அதிகாரி, நேற்று மாலை 6.30 மணியளவில் எம்.ஏ.சி.சி. அலுவலகத்திற்குச் சாட்சியம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டார்.
எம்.ஏ.சி.சி. சட்டம் 2009-இன், 17 (a) பிரிவின் கீழ் அந்நபர் விசாரணை செய்யப்பட்டார்.
தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே ! தலையைத் திருகப்போவது யார் ??? (தலையை பிடிங்கடா, எல்லாம் சரியாகிவிடும்)