இப்போதைய அம்னோ தலைவர்கள் தகுதியற்றவர்கள் என்பதால் அடுத்த பொதுத் தேர்தலில் அவர்களைத் “தீர்த்துக் கட்ட வேண்டும்” என்று பக்கத்தான் ஹரபான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
அவர்கள் இன்னமும் கண்மூடித்தனமாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை நம்புகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், தமக்கும் அமைச்சர் ஒருவருக்குமிடையில் நடந்த ஓர் உரையாடலைச் சுட்டிக்காட்டினார்.
“ஒரு அமைச்சரைப் பார்க்க நேர்ந்தது. அவர் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. அவரிடம் கேட்டேன்: ம்ம்ம்……ஷகிடான்….. அடடா, தவறுதலாக பேரைச் சொல்லிவிட்டேனே, அவரிடம், ஷகிடான் எதற்கய்யா இன்னும் உங்கள் தலைவரின்(நஜிப்பை) பின்னாடியே ஓடுகிறீர்கள் என்றேன்’”.
மகாதிர் குறிப்பிட்டது முன்னாள் பெர்லிஸ் மந்திரி புசாரும் இப்போது பிரதமர்துறை அமைச்சராகவுமுள்ள ஷாகிடான் காசிமைத்தான்.
“அதற்கு ஷகிடான் கூறினார், ‘அவர் எதையும் எடுக்கவில்லை’. சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி கூறிவிட்டாராம், அவர் (பணம்) எடுக்கவில்லை என்று. அபாண்டி கூறியதை அவர் அப்படியே நம்புகிறாராம்.
“நஜிப்பைக் காப்பாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட ஒருவரை நம்பும் இப்படிப்பட்ட தலைவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இதிலிருந்து எப்படிப்பட்ட தலைவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. எல்லாரும் கண்ணையும் காதையும் வாயையும் மூடிக்கொண்டிருக்கிறார்கள்”, என்றார் மகாதிர்.
“நாட்டை நேசிப்பவர்களும் அதைக் காப்பாற்ற நினைப்போரும் இப்படிப்பட்ட தலைவர்களை ஒழியட்டும் என்று விட்டுவிட வேண்டும். அவர்களுக்கு வாக்களிக்காதீர்ப்கள், பிஎன்னையும் அம்னோவையும் நஜிப் உள்பட அவர்களின் தலைவர்களையும் ஒழித்துக்கட்டுங்கள்”, என்றவர் வலியுறுத்தினார்.
எல்லாம் உம்முடைய திருவிளையாடலின் மறுவடிவம்தான் ! உம்மிடமிருந்து கற்றுக்கொண்ட வித்தைதானே அனைத்தும் ! குருவையே மிஞ்சிவிட்டானே சிஷ்யன் என்று உமக்கு பொறுக்கவில்லை போலும். தகுதியற்றவனை தலைமைப் பதவிக்கு பரிந்துரைத்த உம்மால்தான் இன்று இந்த தரித்திரியம் !
‘பொய்’ எப்போதுமே எக்ஸ்பிரஸ் ட்ரெனில் (Express Train) வந்துவிடுமாம். ‘மெய்’, அதாவது உண்மைகள், எப்போதுமே மெதுவாக மாட்டுவண்டிகளில் வருமாம். அது இப்போது உண்மையாகிவிட்டது. அம்னோ முதலைகளை பற்றி காலம் காலமாக எதிர்க்கட்சிகள் வாய்க் கிழிய கத்திக் கொண்டிருந்த வேளையில் ஒரு பயலும் காது கொடுத்து கேட்கவில்லை. இப்போது மகாதிமிர் அம்னோ ‘பணம்தின்னிகளைப்’ பற்றி மேடைகளில் பேச முற்பட்டுவிட்டார். நன்றி.
உன் ஆட்சி காலத்தில் உன் சமூகத்தை குப்பையில் இருந்தவனை கோபுரத்தில் ஏற்றி தமிழனை எட்டி உதைத்து மகிழ்ச்சி அடைந்தாய். இன்று கோபுரத்தில் இருக்கும் உன் சமூகம் உன்னையே எட்டி உதைத்து வசைபாடுவது நீ செய்த அட்டுழியம்தான். உன் திருவிளையாடல் காலத்தின் அத்தியாயம்.இது இந்திய சமூகத்தின் எலும்பு துண்டு நாதேரிகளுக்கும் பொருந்தும்.
தெரியாமல் கேட்கிறேன். வரும் பொதுத்தேர்தலில் பக்கத்தான் ஆட்சிக்கு வந்துவிட்டால், மகாதிமிர் அம்னோவை புதுப்பித்துவிட்டால்?
தகுதியற்ற அம்னோ தலைவர்களை தூக்கி வீசுங்கள் என்றால்
உங்களுடைய அணியில் உள்ளவர்களும் முன்னாள் அம்னோ தலைவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
Mahathir vanthal nallathu.
அம்னோவில் தகுதி என்பது எக்காலத்திலும் இருந்தது கிடையாது– ஆனாலும் மூசா இத்தாம் போன்ற வர்கள் 50 % பரவாயில்லை. இப்போது இருக்கும் நாதாரிகள் நமது மரியாதைக்கு தகுதி அற்றவர்கள்.