இன்று புத்ரா ஜெயா அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் சுமார் 5,000 அரசுப் பணியாளர்களிடையே உரையாற்றிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எதிரணி ஆட்சிக்கு வந்தால் அவர்களின் வாழ்க்கை இருண்டு விடும் என்று எச்சரித்தார்.
ஆளும் கூட்டணியும் அரசுச் சேவையும் பிரிக்க முடியாதபடி ஒன்றிணைந்துள்ளன என்றாரவர்.
“அதனால்தான் சில தரப்பினர், குறிப்பாக எதிரணியினர், மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு நம் நாட்டு அரசுப் பணியில் தேவைக்கு அதிகமான ஆள்கள் இருப்பதாகக் குறை சொல்லும்போதும் அவர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க விரும்புவதாகக் கூறும்போதும் நாங்கள் ஆத்திரமடைகிறோம்.
“அரசாங்க அதிகாரிகள் ‘திறனற்றவர்கள்’ என்றும் makan gaji buta (வேலை செய்யாமல் சம்பளம் வாங்கும் கூட்டம்) என்றும் எதிரணி முத்திரை குத்தி வைத்துள்ளது.
“அரசுப் பணியாளர்கள் எதற்கும் பயன்படாதவர்கள் என்றுகூட சில எதிரணித் தலைவர்கள் துணிச்சலாகக் கூறுகிறார்கள்.
“இந்த எதிரணி நாட்டை ஆள்வதற்கு அனுமதித்தால் பெரும்பான்மை அரசுப் பணியாளர்கள் என்ன ஆவார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்”, என்று நஜிப் கூறினார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்போல, உம்முடைய திறனையும் பயன்பாட்டையும் வைத்தே உமக்குக்கீழ் பணியாற்றுபவர்களின் திறனையும் பயனையும் அளவிட முடியும். உள்ளூர்-அயலூர் செய்திகள், உம்மை அளவிடும் துலாக்கோல் ! கண், மனது, புத்தியை திறந்துவைத்து வாசித்துப்பாரும். எதுவாக இருந்தாலும் ஏதும் உமக்கு உறைக்காது என்கிறீரா ! உம்முடைய பலகீனத்தை மறைக்க எதிரணியை சாடுகிறீர் ! எதிராளியின் வில்லிலிருந்து புறப்படும் அம்பை எதிராளிக்கே திருப்பிவிடும் திறன் உம்மையன்றி வேறு யாருக்கு வரும் ? அப்பனுக்கே பாடம் சொல்லும் சுப்பனையா, நீர் !!!
இப்ப மட்டும் என்ன வெளிச்சமாகவா இருக்கு?
பொதுத்தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் இனத்துவேசத்தை உண்டாக்குகிறார் இந்த அழத்தாந்துயா நஜிப். அரசாங்க பொதுச்சேவை துறையில் குறைந்தது 90 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள். மலாய்க்காரர்களை உசுப்பேத்திவிடும் செயலே இது. ஒரு காலத்தில் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்த எல்லா இனத்தினரும், இன்று சுக்கு நூறாக பிளவுபட்டு கிடப்பதே, இந்த அம்னோ ஆட்சியினால்தான்.
பினாங்கு , சிலாங்குர் மாநிலம் எதிர்க்கட்சியின் ஆட்சி நடக்கிறது. அரசு ஊழியர்கள் அதிக போனஸ் பெறுகின்றனர். உங்கள் எச்சரிக்கை மக்களிடத்தில் எடுபட வாய்ப்பில்லை. மக்கள் வாழ்வாதாரம் உங்கள் ஆட்சியில் சிரமத்துடன் உள்ளது என்பதை உணருங்கள். ஜி எஸ் டி. விலை உயர்வு,பாதுகாப்பற்ற சூழ் நிலையில் வாழ்க்கை நிலை மற்றும் நிலையற்ற சூழ்நிலை ஆகியவை உள்ளடிங்கியது தற்பொழுதைய நாட்டின் நிலமை. இதை நிவர்த்தி செய்ய வழி காணுங்கள்.இல்லயேல் ஆட்சி மாறுபட உருவாகினால் அதற்கு உங்கள் தலைமைத்துவம் அதற்கு பொறுப்பாக நேறிடும்.
தன் வாழ்க்கை இருளை நோக்கிக் கொண்டிருப்பதை மறைமுகமாக மக்களுக்கு குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு கூறுகிறார் இந்த நம்பிக்கை மன்னன்.