மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்ஏசிசி) ஓர் அமைச்சின் ஐந்து அதிகாரிகள் பத்து நிறுவனங்களுடன் சேர்ந்து ரிம100 மில்லியன் ரிங்கிட்வரை சுருட்டியிருக்கலாம் என நம்புகிறது. அமைச்சின் பெயரை அது குறிப்பிடவில்லை.
“பல ஆண்டுகளாக அவர்கள் இதைச் செய்து வந்துள்ளனர். திட்டங்களைச் செயல்படுத்துவதாகக் கூறிக்கொண்டு செயல்படுத்தாமலேயே பணத்தை அமுக்கி விடுவார்கள்.
“கட்டுமானத் திட்டங்களுக்கான நிதியிலிருந்து மட்டும்தான் பணத்தைக் கொள்ளையிட்டார்கள் என்பதில்லை.
“ஏழை மாணவர்களுக்கான உணவுத் திட்டத்தையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை”, என்று எம்ஏசிசி விசாரணை குறித்து நன்கு அறிந்த வட்டாரம் ஒன்று தெரிவித்ததாக இன்றைய நியு ஸ்ரேய்ட்ஸ் டைமஸ் கூறியது.
திட்டங்களை நிறைவேற்றி விட்டதாக எழுதி வைப்பார்கள். ஆனால், எதுவும் நிறைவேற்றப்பட்டிருக்காது.
எம்ஏசிசி இதுவரை அமைச்சின் அதிகாரிகளுடன் ஒத்துழைத்த 10 நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளது. விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதால் நிறுவனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அவ்வட்டாரம் தெரிவித்தது.
அடிமுதல் நுனிவரை அனைவருமே திருடுகிறீர்கள். இதில் யார் யாரைப் பிடிப்பது ? MACC- ஒரு திருட்டுப்பயலின் கைபொம்மை ! சரிப்பட்டு வராது. விசாரணை, கைது பின் இரகசியமாக விடுதலையாகிவிடுவர் ! தண்டனை கடுமையாக இருப்பின் எவன் தவறிழைக்கத் துணிவான் ? தேசப்பற்றும், தூரநோக்கு பார்வையும், நற்சிந்தனையும் உள்ளவன், பொதுப்பணத்தைத் (மக்களின் வரிப்பணம்) திருடமாட்டான்.
தலையே சரியில்ல திருடு வால் என்ன சேய்யும் அதுவும் திருடும். மக்கள் தான் சரியான தீர்ப்பு கொடுக்கணும் பொது தேர்தல் வழி
வெள்ளம் சாப்பிட்ட பிரதமரை விட்டுட்டோம்
விரல் சூப்பின அமைச்சின் அதிகாரிகளை கண்டுப்பிச்சிட்டோம்
என பிலிம் காட்டுவதே பொழுது போக்கா போச்சு எம்ஏசிசி-க்கு.