நாட்டிற்குச் சுதந்திரம் பெற்றுத்தந்ததில் கட்சியின் பங்கு பற்றி அம்னோ தலைவர்கள் தற்பெருமை அடித்துக்கொள்கிறார். ஆனால், இன்றைய அம்னோ அதற்கு எதிர்மாரானதைச் செய்கிறது என்று மகாதிர் கூறுகிறார்.
“இன்றைய அம்னோவிலிருக்கும் கயவர்களைப் போன்றவர்களால் சுதந்திரத்தைப் பெற்றிருக்கவே முடியாது. நல்லகாலமாக, அதை துங்கு அப்துல் ரஹ்மான் வழி நடத்தினார்.
“அதை இன்றுபோல் நஜிப் வழிநடத்தி இருந்தால், நாம் இன்னொரு நாட்டிற்கு சொந்தமாகி இருப்போம், ஏனென்றால் அவர் வாங்கியுள்ள பெருங்கடனை நம்மால் கொடுக்க முடியவில்லை”, என்று மகாதிர் அவரது முகநூல் வீடியோவில் பதிவேற்றம் செய்துள்ளார். .
புத்ரா ஜெயாவிலுள்ள ஒரு தேசியப்பள்ளியில் அம்னோ கொடிகளை பறக்க விட்டு அப்பள்ளியின் மாணவர்களை அக்கட்சியின் பாடலை பாட வைத்த நிகழ்ச்சி பற்றி கருத்துரைக்கையில் மகாதிர் இவ்வாறு கூறினார்.
“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்றும் தற்போதைய அம்னோ தலைவர்களால் இன்றைய அம்னோ தூய்மையில்லாததாக ஆக்கப்பட்டுள்ளது”, என்றாரவர்.
என்ன செய்வது? உங்கள் அரசியல் வாரிசுகளை ஒழுங்காக வளர்க்கவில்லை! இப்போது நொந்து என்ன செய்வது!
இன்றைய அவலநிலைக்கு வித்திட்டது நீர் எழுதிய “MALAY DILEMMA” என்ற புத்தகம்தான்.
மகாதிமிர் அவர்களே! அடகு வைக்கப்பட்ட பொருள் மீட்கப் பட வில்லையென்றால் ‘முழுகி’ போகுமே! ஐயோ ! நமது நாடு அம்பேலா? உருப்படாத அரசியலை உமது சிஷ்யர்களுக்கு கற்றுக் கொடுத்ததினால் வந்த வினை. அவதி படுவதோ மக்களாகிய நாங்கள். போதுமடா சாமி. ஐயா மகாதிமிரே! சரித்திரம் தெரியாதவரே,இந்த நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர்கள் நாதாரிகள், அம்னோவினர் அல்ல. கம்யூனிஸ்டுகள். வெள்ளைக்காரர்களுடன் போரிட்டு ரத்தம் சிந்தியவர்கள் கம்யூனிஸ்டுகள். அதிகளவில் வெள்ளையர்கள் சாவதை பொறுக்கமாட்டாமல், துங்குவை அழைத்து, வெள்ளைக்காரன் சொன்னான், “உமது நாட்டுக்கு சுதந்திரம் தந்துவிடுகிறேன், ஆனால் கம்யூனிஸ்டுகளை மட்டும் உங்களது ஆட்சியில் சேர்த்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் எங்களது ஆட்களை நிறைய பேர்களை அவன் கொன்று விட்டான்.” இந்த செய்தியை கம்யூனிஸ்ட் தலைவன் சிம் பெங் கிடம் சொல்வதற்காகவே பாலிங் நகரில் (1955 ல் )ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டது. அந்த சந்திப்பை இன்று கூட,’Baling Talk’ என்றழைக்கப்படுகிறது. நல்லா தின்னுப்புட்டு நாலு பெண்டாட்டிகளுடன் சல்லாபம் செய்பவன், நாட்டுக்காக போராட வந்தவிட்டானாம், இந்த ‘அம்புலிமாமா’ கதையெல்லாம் இங்கு வேண்டாம், மவனே.
அடகுதானே வைக்கிறான்…விற்கவில்லையே அதுவரையில் உம்னோ சமத்து தானே…
சுதந்திரத்தை பெற போராடிய தமிழர்களை எட்டி உதைத்து இன்று நல்லவன்போல் பேசுவது காலம் கடந்த ஒன்று. உண்மையான சுதந்திரம் இழந்த நாடாக உருவானதற்கு உங்களுடைய இனவாத கொள்கையும் அடங்கும்.அனைவரையும் மலேசியர்கள் என்ற கொள்கையுடன் ஆட்சி செய்திருந்தால் இன்று வருத்தப்படவேண்டிய அவசியம் இல்லை. அனைவரும் மலேசியாகள் என்ற உணர்வும் இல்லாத சூழ்நிலையும் உருவாகிவிட்ட்து .