எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் இருக்கைகளைப் பரிமாற்றம் செய்துகொள்வதற்கு பாரிசான் நேசனல் பங்காளித்துவக் கட்சிகளுடன் விவாதிக்க மஇகா தயாராக இருப்பதாக அதன் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கூறுகிறார்.
தற்போது பின்பற்றப்பட்டு வரும் இருக்கை ஒதுக்கீட்டு முறை நிலைநிறுத்தப்பட வேண்டும், ஏனென்றால் எந்த ஒரு மாற்றமும் இந்த முறையில் மற்றும் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரியத்தில் சிக்கல்களை உண்டாக்கும் என்றாரவர்.
இதுவரையில் கைவசமிருக்கும் இருக்கைகளை விட்டுக்கொடுக்கும் திட்டம் ஏதும் இல்லை. ஆனால், இருக்கைகள் பரிமாற்றம் செய்துகொள்வது பற்றி நாம் பேசலாம். மஇகா தயார். ஆனால், அது கட்சி போட்டியிடவிருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றியதாக இருக்காது என்றாரவர்.
நாம் ஒரு நல்ல தீர்வு காண்போம். அது தீர்க்கப்படலாம் என்று நான் நம்புகிறேன் என்று அவர் இன்று மஇகா மத்திய செயற்குழுவின் கூட்டத்திற்குப் பின்னர் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
வாழ்த்துகள் எல்லா திருடனும் குண்டர் கும்பல் தலைகளும் மண்ணை கவ்வட்டும்
செய்தியாளர் சந்திப்பில் வீரவசனம் பேசிவிட்டு “இந்தியர்களின் மேம்பாட்டுத் தந்தை” முன்னிலையில் கைகட்டி, வாய்பொத்தி, “அதை”யும் பொத்தி பவ்வியமாக வந்துவிடுவீர்கள். அடுத்த செய்தியாளர் சந்திப்பில் உங்கள் இயலாமையை மறைத்து, ஏதாவதொரு சமாதானம் கூறுவீர்கள். காலங்காலமாக இதுதானே அரங்கேறிவருகிறது ! முன்பு ஒரு தலைவர் இருந்தார்,இந்தியர்களைக் கண்டால் முண்டாசு தட்டுவார் ! “அவர்களிடம்” முப்பத்திரண்டு பற்களையும் காட்டி, கிடைப்பதை சுருட்டிக்கொண்டு கோடீஸ்வரரானார். கூன்விழுந்த சமுதாயத்தின் கூனையும் ஒடித்துப்போட்டு,சாதனைப் படைத்த சாதனைத் தலைவன், அவன்.
கேமரன் மலை தொகுதியை MyPPP கட்சிக்கு வீட்டுக் கொடுங்கள். கேவிஎஸ் அங்கே உள்ள மக்களுக்கு நிறைய செய்து வருகிறார். கேமரன் மலையில் ம.இ.கா. வெறும் கோச டப்பா.
நீ எல்லாம் எதை பரிமாற்றம் செய்வாய் என்று தெரியாதா? நாம் நாறிப்போய் இவ்வளவு காலம் ஆகியும் புரியாதா?
எதிர்வரும் 14-வது பொது தேர்தலுக்காக மஇகா இருக்கை பரிமாற்றம் செய்தாலும்-செய்யா விட்டாலும் மஇகா-வின் படுவீழ்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
சுருங்க சொன்னால் மஇகா ஒரு நாடாளுமன்ற தொகுதியை வென்றாலே அதுவே பெரிய வெற்றியாகும்.
ஆகவே இம்முறை மஇகா வேட்பாளர்களை நிறுத்தாமல் தங்கள் தொகுதிகளை பங்காளி கட்சிகளுக்கு தாரை வார்த்து விட்டு, ஒருவேளை BN ஆட்சியை தக்கவைத்து கொண்டால். செனட்டர் பதவிகளை வாங்கி கொண்டு தங்கள் மரியாதையை காப்பாற்றி கொள்ளலாம்.
நாடாளுமன்ற உறுப்பினராக ஜெயித்து அல்லது செனட்டர் பதவி ஏற்று நாடாளுமன்றதிற்கு போனாலும் ஊம்பி கொண்டுதானே இருக்க போகிறீர்கள். இதற்கு ஏன் ரொம்ப அலட்டி கொள்கிறீர்கள்.