மகாதிர்: தியான் சுவா மேல்முறையீடு செய்திருந்தால் சிறைத்தண்டனை நீட்டிக்கப்பட்டிருக்கும்

சிறைத்தண்டனை     விதிக்கப்பட்ட      பத்து   எம்பி   தியான்  சுவா,  மேல்முறையீடு   செய்தால்   தண்டனைக்  கூட்டப்படலாம்   என்று   நினைத்தார்,  அதனால்தான்   தண்டனையை   எதிர்த்து   மேல்முறையீடு   செய்யவில்லை   என  பக்கத்தான்   ஹரபான்   தலைவர்    டாக்டர்    மகாதிர்  முகம்மட்   கூறினார்.

மலேசிய   நீதித்துறையின்மீது   அவருக்கு  நம்பிக்கை   இல்லை. சிறை   செல்லுமுன்னர்  சுவா   தொலைபேசி  வழி    தம்மைத்   தொடர்புகொண்டதாக  மகாதிர்   சொன்னார்.

“மேல்முறையீடு   செய்யலாம். ஆனால்,  அது (தண்டனைக்  காலம்)    ஐந்து   மாதமாக  நீட்டிக்கப்படலாம்.  அதற்கு   ஒரு  மாதம்   சிறைசெல்வது   மேல்  என்றாரவர்.

“(சுவா  இப்படி   முடிவெடுத்தார்   என்றால்)   நம்  சட்டமுறைமீது   நம்பிக்கை  இல்லாமல்   போய்விட்டது.

“மேல்முறையீடு   செய்தால்  தண்டனை   அதிகரிக்கலாம்.  ஓரு  மாதம் ஐந்து   மாதங்களாகலாம்.

“இதுதான்  இப்போதைய  நிலை. நாட்டைச்   சட்டத்துக்கு  மதிப்பளிக்கும்   நாடாக  நிலைநிறுத்த    வேண்டும்”,  என  நேற்றிரவு    ஜாலான்  செந்தூலில்   சுவாவின்   அலுவலகத்துக்கு   வெளியில்   மகாதிர்   கூறினார்.