மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.), 2008-ல் தொடங்கப்பட்ட போது உறுதியளித்தது போல், தங்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5,000-மாக உயர்த்த வேண்டுமென விரும்புவதாக அதன் துணை ஆணையர் கூறினார்.
எம்.ஏ.சி.சி.-யின் துணை ஆணையர் (தடுப்பு) ஷாம்ஷுன் பஹாரின் முகமட் ஜமில், தற்போது உள்ள 2,800 பணியாளர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனவும், அதனால், தங்கள் பணிகளைத் திறன்பட, விரைவாக செய்து முடிக்க முடியவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.
“9 ஆண்டுகளுக்கு முன்பு, ‘ஊழல் எதிர்ப்பு இலாகா’-ஐ (பீபிஆர்), ‘மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்’-ஆக (எம்.ஏ.சி.சி.), மாற்றப்பட்டபோது, ஹாங்காங்கில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தைப் போல், குறைந்தபட்சம் 5,000 உறுப்பினர்களாக அதிகரிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது, ஆனால் இன்றுவரை அந்த எண்ணிக்கை இன்னும் எட்டப்படவில்லை.
“ஊழல் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத் திட்டங்களை அமல்படுத்துவதற்கும், அமலாக்கம் மற்றும் விசாரணைகளை முன்னெடுக்கவும், எம்.ஏ.சி.சி.-க்கு ஆள்பலம் போதுமானதாக இல்லை, ஆணையம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்றாகும்,” என்று, நேற்றிரவு நடந்த பீ.பி.ஆர்./ எம்ஏசிசி-யின் 50-வது ஆண்டு வட்டமேசைக் கூட்டத்தில் அவர் பேசினார்.
ஊழல் மலிந்து கிடப்பதை உங்கள் ஆணையமே ஒப்புகொண்டு அதை எதிர்கொள்ள ஆள்பலம் தேவைப்படுகிறது என்கிறீர்கள். இருப்பவர்களின் மேல் படிந்திருக்கும் தூசியை தட்டி, உறக்கத்தை கலைத்து சுறுசுறுப்பாக பணியில் ஈடுபட வையுங்கள். (சோம்பேறி) இனத்திற்கு முன்னுரிமை அளித்து திறனுக்கு மதிப்பளிக்காததால் வந்த வினைதான் இது. சான்றுக்கு, ஒரு நீர் குழாய் பழுதடைந்த இடத்தில் ஒருவன் பள்ளம் தோண்டுவான், ஒன்பதுபேர் அதை வேடிக்கை பார்ப்பார்கள் ! இப்படியிருந்தால் எப்படி விளங்கும் ?
ஊழலை பற்றி எல்லாருக்கும் தெரியும் ஆனால் தெரியாது. அதுவே வாழ்க்கை என்று ஆகிவிட்ட போது அதை பற்றி அக்கறை தேவை இல்லை– இந்தியாவும் ஒரு உதாரணம். அங்கு அப்பட்ட ஊழல் எல்லாவற்றிலும். ஊழலுக்கு லீ குவான் இயூ போன்ற ஒரு தலைவன் தேவை-லீ-க்கு மன உறுதியும் ஊழலை உண்மையிலேயே ஒழிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது–அத்துடன் இந பாகுபாடு இல்லாமலும் திறமைக்கு மதிப்பு இருந்தது. ஆனால் இங்கு? பேருக்குத்தான் MACC –எல்லாம் வெறும் கண்துடைப்பு.