எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் ‘இருக்கை மாற்றங்கள்’ குறித்து மஇகாவுடன் பேசுவதற்கு மைபிபிபி தயாராக இருப்பதாக அதன் தலைவர் எம். கேவியஸ் கூறினார்.
ஒற்றுமை மற்றும் பிஎன்னுடன் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சி என்ற முறையில், தமது கட்சி இவ்விவகாரம் குறித்து மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியத்துடன் விவாதிக்க விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.
ஒரு வெற்றிச் சூழ்நிலையை உறுதி செய்வதற்கு பிஎன்னின் அதிகாரப்-பகிர்வு கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும். இது 14 ஆவது பொதுத் தேர்தலில் பெரிய பெரும்பான்மை பெறுவதை உறுதி செய்வதற்காகும் என்று தானா ராத்தாவில் இன்று கேவியஸ் கூறினார்.
கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியின் மீது கேவியஸ் கண் வைத்துள்ளார். கடந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் மஇகா முன்னாள் தலைவர் ஜி. பழனிவேலு வெற்றி பெற்றார்.
சீனிவாசகம் சகோதரர்களின் மறைவுக்குப்பின் பி.பி.பி. கட்சி புதையுண்டு போனது. புதைந்துபோன இடத்தில் முளைத்த சில காளான்கள் பிழைப்பதற்கு பிச்சைத் தேடி அலைகின்றது ! மக்களின் இரத்தத்தை உறியும் ஓநாய்களோடு-இன்னொன்றும், கொஞ்சம் உறிஞ்சிக்கொள்ள சுற்றிச்சுற்றி வருகிறது.