பாலிங் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள 6,000 இந்தியர்களுக்கு சேலைகள் மற்றும் குர்தாஸ்கள் தீபாவளி அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இன்று, 3,000 க்கு மேற்பட்ட இந்தியர்கள் நன்கொடைகளைப் பெற்றனர். இது எட்டாவது முறையாக நடத்தப்படுகிறது. திருவிழா காலத்தில் அச்சமூகத்தின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கு இது உதவுகிறது என்று பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம் கூறினார்.
“நாங்கள் இதற்கு, ரொக்கம், உணவு ஹேம்பர்ஸ் உட்பட, ரிம700,000 செலவிட்டோம். 100க்கு மேற்பட்ட சமூக வீடுகள் பழுது பார்க்கப்பட்டன”, என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தாய்மாரே……யார் என்ன கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். காரணம் அது ______ இல்லை. ஆனால் நீங்கள் வாக்குப் பெட்டியில் போடப்போவதை பார்த்துப் போடுங்கள். காரணம் அது உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்.
அப்புறம் அரிசியும் பருப்பும் எப்பொழுது கொடுக்கப் போகின்றார்?