கிட் சியாங்: இந்த நூற்றாண்டில் மலாய்க்காரர்-அல்லாதவர் பிரதமராக வரப் போவதில்லை

 

டிஎபி நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங் தாம் இந்நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண்டிருந்ததே இல்லை என்றார். இந்நாட்டில் இந்த நூற்றாண்டில் ஒரு மலாய்க்காரர்-அல்லாதவர் பிரதமர் ஆவார் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்காவை எடுத்துக்காட்டாக கூறிய அவர், ஒரு கருப்பர் அந்நாட்டின் அதிபராவதற்கு (அதிபர் ஒபாமா) 230 ஆண்டுகள் ஆகின.

மலேசியாவில் ஒரு மலாய்க்காரர்-அல்லாதவர் பிரதமர் ஆவதற்கு 230 ஆண்டுகள் தேவைப்படாது என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

ஆனால், அடுத்த நூறு ஆண்டுகளுக்கு பிரதமர் மலாய்க்காரராகத்தான் இருப்பார். இது அரசியல் எதார்த்தம். ஆனால், இது அம்னோக்காரர்களின் மலாய்க்காரர்களை அச்சுறுத்தும் பொய்யான பரப்புரைகளை நிறுத்தாது. அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ தோற்கடிக்கப்பட்டால், மலாய்க்காரர்கள் அழிந்து போவார்கள் என்று எச்சரித்து அவர்களை அது பிணையாளிகாளாக வைத்திருக்கும் என்று கிட் சியாங் மேலும் கூறினார்.