கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொடர்புக்காக பாஸ், அம்னோவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்

 

அம்னோவுக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள அழைப்புக்காக பாஸ் கட்சி டிஎபியைச் சாடும் அதே வேகத்தில் அம்னோவுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று டிஎபி தலைமைச் செயலாளர் மில் குவான் எங் கூறினார்.

ஆனால், பாஸ் அதைச் செய்யவில்லை. மாறாக அம்னோவும் பாஸும் வேண்டும்போதெல்லாம் டிஎபியை கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்துகின்றதோடு “எனது தந்தை, லிம் கிட் சியாஙையும் என்னையும் (காலஞ்சென்ற மலாயா கம்யூனிஸ் கட்சியின் தலைமைச் செயலாளர்) சின் பெங்கின் பெற்றோரின் உடன்பிறந்தோருடைய குழந்தைகள் என்று கூறும் அளவிற்குச் சென்றுள்ளன”.

“சின் பெங்கிற்கும் எனக்கும் வேறான குடும்பப் பெயர் இருக்கையில், அவர்கள் தொடர்ந்து எங்கள் மீது அவதூறு பரப்புகின்றனர்”, என்று குவான் எங் மேலும் கூறினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) காங்கிரஸுக்கு விடுக்கப்பட்டள்ள அழைப்பு ஓர் அரசியல் செயலாகும் என்று கூறிய குவான் எங், இது அம்னோவுக்கும் சிபிசிக்கும் இடையில் நெருங்கியத் தொடர்பு இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்றாரவர்.

பாஸுக்கு வாக்களிப்பது அம்னோவுக்கு வாக்களிப்பதிலிருந்து வேறுபட்டதல்ல. ஆகவே, உங்களுக்கு பிஎன்னுக்கு மாற்றாக ஒன்று வேண்டுமென்றால் பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களியுங்கள். பாஸுக்கு வாக்களித்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று குவான் எங் மேலும் கூறினார்.

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அம்னோவை தாக்குவதில்லைல். ஆனால் அவர் எதிர்க்கட்சிகளைச் சாடுவதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.

அவர் ஊழலுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தது இல்லை. ஆனால் அவர் எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லிம்-அல்லாதவர்களுக்கு எதிராகப் பகைமை உணர்வைக் காட்டுகிறார் என்று குவாங் எங் மேலும் கூறினார்.