இளம் பெண்களின் வெற்றியைக் காணமுடியாமல் இனவாதம் அம்னோவின் கண்களைக் குருடாக்கி விட்டது

 

மற்ற இனப் பெண்களின் வெற்றியைக் கண்டுகொள்ள முடியாமல் இனவாதம் அம்னோவின் கண்களைக் குருடாக்கி விட்டது என்று டிஎபி இளைஞர் பிரிவுத் தலைவர் டையனா சோபியா அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசாவைச் சாடினார்.

டிஎபியில் சாதனைப் படைத்த இளம் பெண் தலைவர்கள் வரலாறு உண்டு. அம்னோவுக்கு இது தெரிந்திருக்கவில்லை என்று அவர் இன்று மதியம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

மலேசியாவின் சட்டமன்ற உறுப்பினர்களில் மிக இளவயதானவர் ஜோகூர் ஜெயா மாநில சட்டமன்ற உறுப்பினர் லோ சாய் யங். அவருக்கு வயது 27.

டிஎபியின் சிலாங்கூர் மாநில சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ மலேசியாவின் முதல் பெண் சட்டமன்ற தலைவராக (Speaker)அவரது 34 ஆவது வயதில் தேர்வு செய்யப்பட்டார் என்று சோபியா சுட்டிக் காட்டினார்.

அம்னோ 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் அது இது போன்றதைச் சாதிக்கவில்லை.

அம்னோ இன்னும் இனவாத அரசியலில் வீழ்ந்து கிடக்கிறது. அதற்கு இந்த இளம் பெண்களின் சாதனைகளை மதிக்க முடியவில்லை, ஏனென்றால் அவர்கள் மலாய்க்காரர்-அல்லாதவர்கள் என்று சோபியா மேலும் கூறினார்.