2017 தீபாவளிக்கு, 2 நாள்கள் பொது விடுமுறையை சிலாங்கூர் மாநில அரசு வழங்க வேண்டும் எனும் சில இந்திய அரசு சார்பற்ற இயக்கங்களின் கோரிக்கையைத் தான் ஆதரிப்பதாக, காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர், ஜி.மணிவண்ணன் கூறியுள்ளார்.
“இதற்கான அனுமதியைப் பெற சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபூடின் இட்ரீஸ் ஷா அவர்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டுச் செல்ல வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
“சிலாங்கூர் மந்திரி பெசார், அஸ்மின் அலி இந்தக் கோரிக்கைக்கு கவனம் செலுத்துவார் என நான் நம்புகிறேன்,” என்றும் மணிவண்ணன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
அஸ்மின் அலி, சிலாங்கூர் மாநில தீபாவளி கொண்டாட்டத்தில் இணைய, கிள்ளான், தெங்கு கிளானாவுக்கு வருகை புரியவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஆக, சிலாங்கூர் மாநிலத்தின் ‘தீபாவளி 2017 விசேஷ விடுமுறை’யை, மந்திரி பெசார் கிளானா ஜெயாவில் ஆற்றவுள்ள தனது அதிகாரப்பூர்வ உரையில் அறிவிக்க வேண்டும்.”
“மத்திய அரசு அதைச் செயல்படுத்த தவறிவிட்டது, ஆனால், சிலாங்கூர் அரசு அதன் நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருக்கும் நூற்றுக்கணக்கான இந்தியர்களின் மீது அக்கறை காட்டும் வகையில் இதனை அறிவிக்க வேண்டும்,” என மணிவண்ணன் வலியுறுத்தினார்.
அக்டோபர் 13, 2017-ல், இது தொடர்பான கோரிக்கை மனுவை, இந்திய அரசு சார்பற்ற நிறுவனங்கள் சிலாங்கூர் மந்திரி பெசாருக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
“இந்த மனுவிற்கு, மந்திரி பெசார் நல்லதொரு பதிலைத் தருவார் என நான் எதிர்பார்க்கிறேன்,” என்றும் மணிவண்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்வாண்டு தீபாவளி, அக்டோபர் 18- ம் தேதி, புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. ஆக, சில அரசு சார்பற்ற இயக்கங்கள், அக்டோபர் 19, வியாழக்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்கக் கோரி மனு கொடுத்துள்ளனர்.
சொல்லிட்டாரு! கிடைச்சுடும்!
சிலாங்கூர் மாநிலத்திற்கு பொது விடுமுறைக்கான சாத்தியம் இல்லை. ஆனால் மாநிலத்தில் உள்ள இந்தியர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒருநாள் விடுமுறை கிடைப்பதற்கான சாத்தியம் அதிகம் உண்டு.
ஆனால் இந்தியர்களின் மேம்பாட்டுக்கான தந்தை என்று பறைசாற்றிக்கொள்ளும் பிரதமர் அதை நிஜப்படுத்த நாடு முழுவதற்குமான இரண்டு நாள் பொது விடுமுறையை அறிவிக்க வேண்டும்.
இப்படி ஊர் கூடி தேர் இழுத்து அந்த தேர் (2- நாள் பொது விடுமுறை) கிடைத்த பின் நாங்கள் தான் காதும் காதும் வைத்த மாதிரி பிரதமரிடம் பேசி கூடுதல் விடுமுறை வாங்கினோம் என்று பீற்றிக் கொள்ள இப்போதே ஒரு கூட்டம் தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறது..
அதை பொங்கலுக்கு கேட்டால் என்ன? கொஞ்சமும் சிந்திக்க மாட்டார் இத்தகைய வான்குடை அரசியல்வாதி. மக்கள் நீதிக்கட்சி இனியும் இத்தகைய உப்புச் சப்பில்லாத அரசியல்வாதிகளை எல்லாம் நிறுத்தினால் கோயிந்தா! கோயிந்தா!
என்னடா இது, வம்பா போச்சு! சிலாங்கூரை அம்னோ ஆண்டபோது தீபாவளிக்கு இரண்டு நாள்கள் விடுமுறை வேண்டும் என பூமியிலிருந்து ஆகாசம்வரை எகிறி எகிறி குதித்தவர்களே நீங்கள்தான். இப்போது யாரிடம் லீவு கேட்குறீர்கள்? மண்டையே சுத்துது போங்க.
ஏன்டா மணி நீ கேட்ட உடனே கிடைச்சிடுமா ! ஆளும் கட்சியிலும் ! எதிர் கட்சியிலும் இந்தியனுக்கு என்ன மரியாதை என்று எங்களுக்கு தெரியாதா ! மணி , தீபாவளி சமயத்தில் விடுமுறை ! திறந்த இல்லம் விருந்து என்று மக்களுக்கு ரோட்டில் சோறு போடுவது இதை விட்டால் வேறு எதுவும் தெரியாதா ! தீபாவளிக்கு உங்கள் சிலாங்கூர் அரசாங்கத்தின் சார்பாக ஏழை இந்தியமக்களுக்கு எதாவது உதவி தொகை கிடைத்தால் தமிழர்கள் தீபாவளியை நல்ல உடை ,உணவு , என்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள் தானே !!கிடைக்கும் ஒரு நாள் விடுமுறை கூட தொழிலார்களுக்கும் ! செக்யூரிட்டி கார்ட் ! போன்றவர்களுக்கும் கிடைப்பதில்லை ! அப்படியே கிடைத்தாலும் ! பொத்தோங் காஜி தான் !!
மாநிலத்தில் பொது விடுமுறைக் கேட்பதில் எந்தத் தவறுமில்லை; தவறென்பது அரசியலில் நம்மவர்கள் இன்னும் போதியளவு வலிமையைப் பெருக்கிக் கொள்ள வில்லை; இதுதான் உண்மை; அரசியலில் நம்மவர்களிடம் இன்னும் போதியளவு விழிப்புணர்வு ஏற்படவில்லை; தூர நோக்குச் சிந்தனையுமில்லை; அதிகமான இந்தியர்கள் வாழும் மாநிலம் சிலாங்கூர் மாநிலம். ஆனால் வாக்காளர் எண்ணிக்கையில் குறைந்தப் பட்ச அளவிலாவது நம்மவர்கள் வாக்காளர்களாக பதிவுச் செய்துக் கொண்டார்களாவென்றால் அதுவும் இல்லையென்றேத் தோன்றும். ஆட்சியாளர்கள் மாநில ஆட்சியைத் மீண்டும் தக்கவைத்துக் கொள்ளவேண்டுமென்றால் இந்திய மக்களின் ஆதரவுகள் அவசியமென்ற நிலை ஏற்பட்டால்தான் நம் நியாயமானக் கோரிக்கைகளுக்கு அவர்களிடமிருந்து நல்ல வரவேற்ப்பும் மரியாதையும் கிடைக்கும். இப்போது இந்திய அரசு சார்பற்ற இயக்கங்கள் சிந்தித்துத் பதில் சொல்லட்டும்! உங்கள் இயக்களிலுள்ள வாக்கு எண்ணிக்கையை இப்போதாவது எவ்வளவென்றுச் சொல்லமுடியுமா? அதன் அளவை வைத்துக் கொண்டுதான் இந்த இயக்கங்கள் மாநில அரசோடு எந்த விஷயத்திலும் உரிமையோடு துணிந்துப் பேச முடியும். இல்லையென்றால் நம் கோரிக்கையும் இல்லையென்றாகிவிடும். ஒவ்வொரு இயக்கத்தின் தலைவனின் முக்கிய முதற்ப் பணி இந்த வாக்காளர்ப் பதிவுப் பணிதான். நாம் எதையோச் சொல்லப் போய் இவன் ஏதோச் சொல்லுகின்றான், உளறுகின்றானென்று பலர் எண்ணக்கூடும். உண்மையென்னவென்றால் இப்போது எல்லாமே அரசியல்தான்; இன்று மலாய்க்காரர் சமுகம் இன்று இந்தளவிற்கு உயர்ந்திருக்கின்றார்களாயென்ரால் அவர்களின் உழைப்பா? வெறும் அரசியல் பலம்தான்; புத்திக் கெட்ட நாம் ஏன் இன்னும் இந்தஉண்மையை ஏற்க்க மறுக்கின்றோம்; அதுவும் விளங்கவில்லை. இனிமேலாவது நாம் மாறுவோமா, சிந்திப்போமா!
யார் இந்த ஜி.மணிவண்ணன் காப்பார் நாடாளுமன்ற உறுபினர்ரா. அவர் எங்கே இருக்கிறார். தெரியதே எங்களுக்கே என்ற கேள்விகள் நிறைய உண்டு. முன்பு இருந்த திரு. மாணிக்கவாசம் மாவது தெரிந்தார் மக்களுக்கு.
ஐயா ஜி, மோகன் அவர்களே.! எல்லா கட்சிகளிலும் இந்த லட்சணம்தான். ஒரு முறை நான் தெலுக் இந்தான் போயிருந்தபோது, அங்குள்ள மக்கள், ‘யார் இந்த மனோகரன், தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரா? அவர் எங்கே இருக்கிறார்? எங்களுக்கே தெரியாதே! என்றார்கள். டி.ஏ.பி. யில் வேறு உருப்படியான ஆட்கள் இல்லாததால், இந்த அரை வேக்காட்டை கேமரன் மலைக்கு அனுப்பியது, அந்த கட்சி.