அடுத்தப் பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் பிடிக்க பல முன்னாள் மந்திரி பெசார்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் மந்திரி பெசார்களான கிர் தோயோ, அபு ஹசான் மற்றும் முகமட் தாயிப் ஆகியோர் இதில் பங்கேற்பர் என்று சிலாங்கூர் பிஎன் தலைவர் நோ ஒமார் கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தின் நான்காவது மந்திரி புசாராக ஆறு ஆண்டுகளுக்கு பதவியிலிருந்த பிகேஆர் தலைவர் அப்துல் காலிட் பாரிசானுக்கு உதவி அளிப்பார் என்று அபு ஹசான் கூறிக்கொண்டார்.
தங்களுக்கு எல்லாம் வயதாகி விட்டது. கிர் தோயோ மிகவும் இளைவர், ஆனால் அவருக்கு வேறு வேலைகள் இருக்கின்றன என்று மலேசியாகினியிடம் கூறிய அபு ஹசான், காலிட்டுக்கு வயது குறைவு என்று கூறினார்.
இது சம்பந்தமாக காலிட்டுடன் தொடர்பு கொள்ளப்பட்டதா என்று கேட்ட போது, காலிட் உதவுவதற்கு தயாராக இருக்கிறார் என்று கூறிய அபு ஹசான், இப்போது தங்கள் பக்கம் நான்கு முன்னாள் மந்திரி பெசார்கள் இருக்கிறார்கள் என்றும் தாம் அது பற்றி நோ ஒமாரிடம் பேசியுள்ளதாகவும் அபு ஹசான் கூறினார்.
அபு ஹசான் கூறிக்கொண்டது பற்றி கருத்துரைக்கும்படி கேட்டதற்கு, காலிட்டின் உதவியாளர் பாகா ஹுஸ்ஸின், முன்னாள் மந்திரி பெசார் காலிட் 14 ஆவது பொதுத் தேர்தலில் அவரது நிலைப்பாடு என்ன என்பதை வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார் என்று கூறினார்.
முன்னாள் பி.கே.ஆர் கட்சியின் தலைவர்(மந்திரி பூசாரி) ஒருவர் அம்னோவை ஆதரிக்கப் போகிறாராம். ஒரு மலாய்க்காரரையும் நம்ப முடியவில்லை. அப்படியிருக்க லிம் கிட் சியாங் நாற்காலி பக்கத்தில் உரசிக் கொண்டிருக்கும் மகாதிமிரை எப்படி நம்புவது.? அரசியல் ஒரு சாக்கடை என்பார்கள். ஆனால் அரசியல்வாதிகளோ, அந்த சாக்கடையில் உருண்டோடிவரும் மலத்தை விட மோசமாக நாற்றெமெடுத்தவர்கள்.
உத்தமர்கள் அனைவரும் ஒன்று கூடி விட்டனர் சிலாங்கூர் மாநிலத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கு
! மக்களை மடையர்கள் என்று என்னி கொண்டு இவர்களெல்லாம் அரசியலில் நிலைத்திருக்க திட்டம் தீட்டி கொண்டு இருக்கிறார்கள் ! ஊழலில் தண்டிக்க பட்டவர்கள் அரசியலில் ஈடுபட கூடாது என்று சட்டம் வரவேண்டும் ! அல்லது ! சிட்டிசன் ஸ்டைலில் தண்டிக்கப்பட வேண்டும் ! சிலாங்கூறில் குப்பை நிறைந்த அசுத்தமான இடம் கோல கிள்ளான் என்று அரசாங்கம் அறிவித்தும் இவரின் தொகுதியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர் ! நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் அனைத்துலக கப்பல் துறைமுகம் இங்கு இயங்குகிறது !வாய்ப்பளித்தும் துரும்பை அசைக்கத்தெரியாதவர்கள் ! பாரிசனுக்கு நாலு காசு பார்க்கலாம் என்று வருகிறார்கள் ! நாமும் இவர்களுக்கு ஓட்டு போட்டு ஆச்சி செய்ய வாய்ப்பளிப்போம் ! மக்கள் முட்டாள் கல் என்ற எண்ணத்தை இவர்களும் மாட்ரி கொள்ள போவதில்லை நமக்கும் இவர்களை விட்டால் வேறு ஆளும் இல்லை !!