நாட்டில் தாக்குதல்கள் நடத்துவதற்கு திட்டமிட்ட பல தனிப்பட்ட நபர்கள் கிளந்தானில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதை உறுதிப்படுத்திய போலீஸ் படைத் தலைவர் முகம்மட் பூஸி ஹருன், இவ்விகாரம் குறித்து ஓர் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார்.
கிளந்தானில் வெடிகுண்டுகள் தயாரிக்கும் திறன்வாய்ந்த பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி கருத்துரைக்கும்படி கேட்ட போது, சில இலக்குகளைத் தாக்குவதற்கு திட்டமிட்டிருந்தது சம்பந்தமாக போலீஸ் சிலரை கைது செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ஹரப்பான் பேரணி
பெட்டாலிங் ஜெயா, பாடாங் திமோரில் நாளை நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் ஹரப்பான் பேரணிக்கு எதிராக போலீஸ் 27 புகார்களைப் பெற்றிருப்பதாக முகம்மட் பூஸி கூறினார்/
இப்பேரணியை நடத்துவதற்கு பெட்டாலிங் மாநகர் ஆட்சி மன்றம் அனுமதி அளித்திருக்கிற போதிலும், அதை அனுமதிப்பதில்லை என்ற முடிவில் போலீஸ் உறுதியாக இருக்கிறது என்றாரவர்.
“நாங்கள் பல காரணங்களுக்காக அப்பேரணிக்கு எதிராக இருக்கிறோம், அதில் போக்குவரத்து நெரிசலும் அடங்கும்”, என்று அவர் மேலும் கூறினார்.