மணி 6.20: “பெண்களே, அழுவதை நிறுத்துங்கள். போராடுங்கள்” என்று ஹரப்பான் பேரணியில் உரையாற்றிய பிகேஆர் வனிதா தலைவர் ஸுரைடா கமாருடின் கூறினார்.
ஜிஎஸ்டி மற்றும் பொருட்களின் விலை ஏற்றத்தால் கவலையடைந்திருக்கும் பெண்கள் அழுவதை நிறுத்துங்கள். பிஎன்னுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து உங்களுடைய உரிமைகளை வலியுறுத்துங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
“நான் சொல்லுகிறேன். பெண்கள் அழ வேண்டிய தேவை இல்லை. (எழுந்து நின்று) நஜிப்புக்கும் பிஎன்னுக்கும் உதைகொடுத்து வெளியேற்றுங்கள். எனது சகோதரிகளே, புத்ரா ஜெயாவை கைப்பற்றுவதற்கு இதுதான் மிகச் சரியான நேரம்”, என்றாரவர்.
1998 இல் அன்வார். இப்போது, நமக்கு புதிய போராளிகள். யார்? மகாதிர் முகமட், முகைதின் யாசின், முக்ரீஸ் மகாதிர் மற்றும் அனைத்து பெர்சத்து உறுப்பினர்கள் என்று அவர் மேலும் கூறினார்.