மணி 6.50: பிஎன் அமல்படுத்திய திட்டங்களில் 99 விழுக்காடு மக்களை ஏமாற்றும் வஞ்சக நோக்கம் கொண்டது என்று ஹரப்பான் பேரணியில் பேசிய பெர்சத்து உதவித் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் கூறினார்.
“ஆச்சரியப்படாதீர்கள் (நான் உங்களிடம் சொல்வது பற்றி). நான்தான் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர். ஆனால், இப்போது நான் உங்கள்முன் நிற்கிறேன்.
“ஏன்? ஏனென்றால் நான் அரசாங்கத் தலைவர்கள் மீது சலிப்படைந்து விட்டேன். அவர்கள் எனது முன்னாள் எஜமானர்கள்.
“ஏற்பாடு செய்யப்பட்ட திட்டங்களில் 99 விழுக்காடு மக்களை வஞ்சித்து அவர்களின் உள்ளத்தைக் கவரும் நோக்கம் கொண்டவை என்று அவர் மேலும் கூறினார்.
பெட்டாலிங் ஜெயா, பாடாங் திமோரில் நடைபெற்றுக்கொன்டிருக்கும் ஹரப்பான் கொள்ளைக்கார ஆட்சி எதிர்ப்பு பேரணி மணி 7.00 லிருந்து 8.00 வரையிலான இடைவேளைக்குப் பின்னர் இரவு மணி 8க்கு மீண்டும் தொடரும்.
ஐயா, முன்னால் தலைமை தேர்தல் அதிகாரி அவர்களே…. நான்தான் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்று பெருமையாக கூறிக் கொள்ளும் உங்களை தான் கேட்க வேண்டும். அதாவது கள்ள ஓட்டு திருடு ஓட்டு என்று சொல்கிறார்களே என்று ஒன்று உள்ளதா. முன்னால் பிரதமர் துன் அவர்களின் காலத்திலும் சொன்னார்கள். அவரவரது சொல்லுவார அப்படி இருந்தது என்று. அதை நம்பவில்லை காரணம் பங்கள காரன்கள் கள்ள ஓட்டு போடுகிரன்கள் என்று சொல்கிறார்கள். பங்களா காரன்களை பார்த்தாலே தெரியும் அவன்கள் பங்கள என்று பிறகு எப்படி கள்ள ஓட்டு போட முடியும். முன்னால் தலைமை தேர்தல் அதிகாரி என்ற முறையில் இந்த விஷயத்தை உண்மையா இல்லை பொய்யா அப்படி ஒன்றும் இல்லை அது பொய் என்று நீங்கள் தான் சரியான விளக்கத்தை சொல்ல முடியும். நன்றி