கெடா, மெமாலியில் 1985 ஆண்டு நடந்த துயரச் சம்பவம் குறித்து விசாரிக்க ஓர் அரச விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஸ் மீண்டும் விடுத்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பல குழப்பமான அறிக்கைகள் விடப்பட்டுள்ளன. அது பற்றிய உண்மையை வெளிக்கொணர்வதற்கு ஒரு நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார
இந்தப் பிரச்சனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்ட போதிலும், இதற்கான ஒரு சிறந்த தீர்வு ஓர் அரச விசாரணை ஆணையம் அமைப்பதாகும் என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்த மெமாலி சம்பவம் 19, நவம்பர் 1985 இல் நடந்தது. ஒரு போதகர் மாமுட்டை, இவர் இப்ராகிம் லிபியா என்றும் அறியப்பட்டவர், கைது செய்வதற்காக போலீஸ் நடவடிக்கை எடுத்த போது, அதில் 18 பேர் கொல்லப்பட்டனர், 4 லிஸ்காரர்கள் உட்பட.