காலிட்: நான் அவர்களுடன் சேரவில்லை; அவர்கள் என்னுடம் சேரலாம்

 

 

முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம் தமக்கு முன்னாள் பாரிசான் மந்திரி பெசார்களுடன் சேர்ந்து கொள்ளும் நோக்கம் இல்லை என்று கூறுகிறார்.

மாறாக, அந்த மூன்று பிஎன் மந்திரி பெசார்களும், முகம்மட் கிர் தோயோ, அபு ஹசான் ஒமார் மற்றும் முகம்மட் முகம்மட் தாய்ப், மக்களின் நலன்களுக்குப் போராட தம்முடன் சேர்ந்துகொள்ள வேண்டும் என்று காலிட் கூறுகிறார்.

“நாம் அரசியலுக்காக அரசியல் செய்வதில்லை. நாம் மக்களின் நலனுக்காக அரசியல் செய்கிறோம்.

“நான் என்ன சொல்கிறேன் என்பது மிக முக்கியமாகும், நான் எங்கே நிற்கிறேன் என்பதல்ல. தண்ணீர் தொழில்துறையை மறுசீரமைப்பு, சிலாங்கூரில், செய்வதற்கு என்னை அம்னோ ஆதரித்தால், அதற்கு நான் ஒப்புக்கொள்கிறேன், நாம் இணைந்து வேலை செய்யலாம்.

“நமது போராட்டம் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது” என்று இன்று ஷா அலாமில் பாஸ் கட்சியின் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

எந்த ஓர் அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும், அடுத்தப் பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கோ சட்டமன்றத்திற்கோ போட்டியிடப் போவதில்லை என்றும் காலிட தெரிவித்தார்.

அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை பிஎன் மீண்டும் கைப்பற்றுவதற்கு உதவ காலிட் இப்ராகிம் தயாராக இருப்பதாக முன்னாள் மந்திரி பெசார் அபு ஹசான் கூறியிருந்தார்.