மைபிபிபி தலைவர் எம்.கேவியஸ், எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்திய சமூகத்தின் ஆதரவு மீண்டும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குத் திரும்பும் என்று நம்புகிறார்.
அது நடக்கும், அப்படி நடக்காவிட்டால் அதற்கு நஜிப் காரணமாக இருக்கமாட்டார். அவர் இந்திய சமூகத்துடன் இணைந்து பணியாற்றும் பொறுப்பை யாரிடம் ஒப்படைத்தாரோ அவர்களே அதற்குக் காரணமாக இருப்பார்கள் என்றாரவர்.
“இந்திய சமூகம் பிஎன்னுக்கு முழு ஆதரவை அல்லது இதற்குமுன் அளித்ததைவிட கூடுதல் ஆதரவை வழங்கும் என்றே நினைக்கிறேன். ஏனென்றால், நஜிப் இந்திய சமூகத்தின்மீது முழுக் கவனம் செலுத்தி வந்துள்ளதார்.
“அதற்கெல்லாம் நல்ல பலன் இல்லையென்றால் அது அவரது(நஜிப்பின்) தவறல்ல, அவருக்குக் கீழ் உள்ளவர்கள், அவர் யாரை நம்பினாரோ அவர்களின் தவறு…..
“அவருக்காக இந்தியர்கள் முழு ஆதரவைக் கொடுப்பார்கள்…….ஏனென்றால் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த இந்தியர்களிடம் கருணை காட்டியவர் அவர்”, என 63-வயது கேவியஸ் மலேசியாகினி நேர்காணல் ஒன்றில் கூறினார்.
ஆண்டுத் தொடக்கத்தில் நஜிப், மலேசிய இந்தியர் செயல்திட்டம் (எம்ஐபி) ஒன்றைத் தொடக்கினார்.
அச்செயல் திட்டம் இந்நாட்டு இந்தியர்கள் எதிர்நோக்கும் சமூகப் பொருளாதார இன்னல்களுக்குத் தீர்வு காணும் நோக்கம் கொண்டது என்று கூறப்படுகிறது.
ஆனால், எதிர்க்கட்சிகளும் மற்றும் சில தரப்பினரும் அது 14வது பொதுத் தேர்தலுக்கான ஒரு பிரச்சாரக் கருவி எனக் கூறுகின்றனர்.
அது நடக்கும், அப்படி நடக்காவிட்டால் அதற்கு நஜிப் காரணமாக இருக்கமாட்டார்..
வரும் ஆனா வராது என்கிற மாதிரி ஏன் இப்படி ஒரு முன்னுக்குப் பின் முரணான கூற்று? நிலையானதொரு பேச்சு இல்லையென்றால் உமக்கெல்லாம் எதற்கு அரசியல் பேச்சு?
யானை யாரும் பின்னே மணியோசை வரும் முன்னே!
எதிர் வரவிருக்கும் தோல்விக்கு யாரையெல்லாம் கை காட்டிட வேண்டுமோ அதற்கு இப்பவே இவர் ஒத்திகை பார்க்கிறார்.
போன தேர்தலில் ஹிண்ட்ராப் உடன் செய்த ஒப்பந்தம் செல்லா காசாக்கியவர் .
மறக்க மாட்டோம் …..
மைபிபிபி கட்சிதலைவர் எம் கேவியஸ்
சொல்வதன் உள்அர்தம்,நஜிப் தோற்றால்
மாஇகாஅலிபாபாவும் 40திருடர்களும்மே
காரணம்என்று வெள்ளந்தியாக
சொல்லுகிறார்!
கவியரசு உமது நேர்மை எமக்கு மிகவும் பிடித்திருக்கிறது ! நீர் சொல்வது உண்மைதான் இந்திய சமுதாயம் மேம்பாடடைவதற்கு ! இந்திய தலைவர்களை நம்பி தானே மானியங்களும் இந்தியர்களுக்கான மேம்பாட்டு திட்டங்களுக்கான நிதிகளும் கொடுக்க படுகின்றன ! இந்தியன் தலைவனாக இருக்கும் எந்த கட்சி இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு உருப்படியான ஏதாவது திட்டங்களை வகுத்திருக்கிறதா !! நேற்று நீர் மகாதீரின் அடி வருடி ! இன்று நஜிப்பின் அடி வருடி ! அவன் செய்வான் ! இவன் செய்வான் ! என்று காத்திருந்து ! உங்களின் தொப்பையை நிரப்பி கொள்ளும் கூட்டம் தானே நீங்கள் எல்லாம் ! அன்று உமக்கு தானை தலைவனிடம் தகராறு ! அவன் கொள்ளை இடுவது போல் நம்மால் முடியவில்லையே என்ற ஆதங்கம் ! இன்று சுப்ரமணி கொள்ளையிடும் இடத்தில் வசதியாக இருப்பதால் ஆதங்கம் !!எவன் தலைமைத்துவத்தாலும் இந்த இந்திய சமுதாயத்தை மேம்படுத்தவும் முடியாது ! திருப்தி படுத்தவும் முடியாது ! தானை தலைவன் ! மக்கள் தலைவன் ! புரட்சி தலைவன் ! எல்லோரையும் நம்பி இந்த சமுதாயம் ! செல்வம் கொழிக்கும் இந்த நாட்டில் கையேந்தும் சமுதாயமாக வாழ்வது தான் தலையெழுத்து !!
ஆமாம் உண்மைதான் உன்னைப் போன்ற ஆட்களை கூட வைத்துக் கொண்டால் கேடு நஜிப்புக்குதான். மக்களை ஏமாற்றும் உமக்கெல்லாம் தொகுதி கொடுத்தால் மக்கள் எதிர்கட்சிக்குதான் ஆதரவு கொடுப்பார்கள்.
Who are you talking about Indian