பார்டி வாரிசான் சாபா தலைவர் ஷாபி அப்டால் இன்றிரவு மணி 9.00 அளவில் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் (எம்எசிசி) கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, செபூர்னா நாடாளுமன்ற உறுப்பினரான ஷாபி கோத்தா கினபாலு அனைத்துலக விமானநிலையத்திலிருந்து நேராக எம்எசிசி அலுவலகத்திற்கு அவரது வழக்குரைஞருடன் சென்றார்.
சாபாவுக்கான மேம்பாட்டு நிதியிலிருந்து குறைந்தபட்சம் ரிம1.5 பில்லியனை தவறாக பயன்படுத்தப்பட்டது குறித்து ஷாபியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ய எம்எசிசி நடவடிக்கை எடுத்தது.
கிராமப்புற மற்றும் வட்டார அமைச்சராக இருந்த ஷாபி, பிரதமர் நஜிப்பின் 1எம்டிபி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து 2015 இல் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
2016 ஆம் ஆண்டில் அவர் அம்னோ உதவித் தலைவர் பதவியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஷாபி அம்னோவிலிருந்து வெளியேறி சாபாவை அடித்தளமாகக் கொண்ட பார்டி வார்சான் சாபாவை நிறுவைனார்.
ஷாபியின் இரு சகோதரர்களையும் இதே விவகாரம் குறித்து எம்எசிசி கைதுசெய்துள்ளது.