தமது சொந்த விருப்பத்தின் பேரில்தான் மாஸின் தலைமைச் செயல்முறை அதிகாரி பெல்லியு மாஸிலிருந்து வெளியேறினார் என்பதை மகாதிர் முகம்மட் நம்பவில்லை.
மாறாக, பிரதமர் நஜிப்பின் தலையீட்டினால்தான் பெல்லியு விலகினார் என்று மகாதிர் கூறுகிறார்.
“பொய் சொல்வதை நிறுத்துங்கள். அந்த நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் நிர்வாகி ஆகியோருக்குத் தெரிவிக்காமல் நஜிப் மாஸ் நிருவாகத்தில் தலையிட்டதுதான் பெல்லியு வெளியேறியதற்குக் காரணம்”, என்று மகாதிர் அவரது வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
மகாதிரின் குற்றச்சாட்டுகளுக்கு எதிவினையாற்றும்படி மலேசியாகினி நஜிப்பின் உதவியாளரைக் கேட்டுக்கொண்டுள்ளது.
எல்லாம் மலாய்க்காரன் மயம் என்று ஆகி விட்டதன் பலன் — இதே போன்று தான் அவன் தொட்டது எல்லாம் — விமானப்படையின் நிலை -அதேதான் வெளியில் இருந்து பார்க்கும் பொது ஒன்றும் தெரியாது -உள்ளே போனால்தான் உண்மை புரியும்