ஷாபி நான்கு நாள்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்

 

பார்டி வாரிசான் சாபா தலைவர் ஷாபி அப்டால் அவரது பிறந்த நாளை சிறைக்கம்பிகளுக்கு பின்னால் கழிக்கவிருக்கிறார், ஏனென்றால் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) அவரை நான்கு நாள்களுக்கு தடுப்புக்காவில் வைப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளது.

ஷாபி நேற்றிரவு மணி 9 அளவில் எம்எசிசியால் கைது செய்யப்பட்டார். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுள்ளதால் அவர் நேற்றிரவை மருத்துவமனையில் கழித்தார்.

இதனிடையே, சிவில் இன்ஜினியரான அமர்ஜிட் சிங் இதே வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எம்எசிசி நேற்று மதியத்தில் கைது செய்தது.

சாபா மாநில கிராம மேம்பாட்டு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ரிம7.5 பில்லியனிலிருந்து குறைந்தபட்சம் ரிம1.5 பில்லியன் ஆறு ஆண்டுகாலத்தில் தவறாகப் பயன்படுத்துள்ளாக கூறப்படுகிறது.