மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பார்டி வாரிசான் சாபாவின் தலைவர் ஷாபி அப்டாலை கைது செய்தது ஒருவகையில் சாபா மக்களுக்கும் பக்கத்தான் ஹரப்பானுக்கும் நல்லதுதான் என்று ஓர் அமனா பேராளர் அக்கட்சியின் மாநாட்டில் கூறினார்.
அமனா தலைவர் முகமட் சாபுவின் கொள்கை உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய சாபா பேராளர் ஹம்ஸா அப்துல்லா, சாபாவில் எம்எசிசி ஷாபிக்கும் பார்டி வாரிசானுக்கும் எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சாபா மாநிலத்தில் பாரிசான் நேசனலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
சாபா மக்களுக்கு அரசாங்கத்தை மாற்றுவது ஒன்றும் புதிதல்ல என்று நான் சொல்வதை நம்புங்கள் என்று ஹம்ஸா கூறினார்.
பாதுகாப்பானவை என்று அவர்கள் கருதும் 25 பின் நாடாளுன்னற இருக்கைகளும் இந்தத் தடவை அவர்களுக்கு ஓயாது வந்துவந்து அச்சுறுத்தும் கொடிய கனவாக இருக்கும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.