பொருள், சேவை வரிதான் பொருள்களின் விலை உயர்வுக்குக் காரணம் என்று சொல்வது சரியல்ல என்று துணை நிதி அமைச்சர் ஒத்மான் அசிஸ் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
வரிகள் மட்டுமே பொருள்களின் விலைகளை நிர்ணயிப்பதில்லை. அன்னிய செலாவணி மாற்று விகிதம், போக்குவரத்துச் செலவு, வேறு சில சந்தைக் கூறுகளும் விலைகளை நிர்ணயிக்கின்றன என்றாரவர்.
“ஜிஎஸ்டிதான் பொருள்களின் விலை உயர்வுக்குக் காரணம் என்று சொல்வது சரியல்ல. ஜிஎஸ்டிக்கு உள்படாத பொருள்களும் விலை உயர்ந்துள்ளன…….பொருள்களின் விலை உயர்வுக்குப் பல காரணங்கள் உண்டு. அது தாங்க முடியாத அளவுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அரசாங்கம் நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது”, என்றாரவர்.
அப்போ ஜி எஸ் டியும் ஒரு காரணம்தான் சொல்றீங்க.