மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) 2013-ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு செப்டம்பர் 30 வரை, 2,309 அரசு ஊழியர்களை விசாரணைக்கு அழைத்ததாக போல் லோவ் செங் குவான் தெரிவித்தார்.
பிரதமர் துறை அமைச்சின், அமைச்சரான அவர், மொத்தம் 1,614 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 663 பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாகவும் மேலும் தெரிவித்தார்.
“அவர்களில் மொத்தம் 344 அரசு ஊழியர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது, மற்ற 150 பேர் தண்டனை இல்லாமல் விடுவிக்கப்பட்டனர்,” என்றும் அவர் கூறினார்.
பொது மக்களில், 1,143 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் 566 பேர் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, 494 குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதாகவும் 41 பேர் குற்றம் புரியவில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
“பொது மக்கள் பிரிவில், தனியார் துறை அல்லது அரசியல்வாதிகள் என்று கணக்கில்லை,” என்று, இன்று நாடாளுமன்றத்தில், பக்ரி நாடாளுமன்ற உறுப்பினர், ஹேர் தென் ஹ்வா எழுப்பிய கேள்விக்கு லோவ் எழுத்துப் பூர்வமாக இவ்வாறு பதிலளித்தார்.