பொருள், சேவை வரியை (ஜி.எஸ்.டி) ஒழித்து, விற்பனை மற்றும் சேவை வரியை (எஸ்.எஸ்.டி) மீண்டும் நடைமுறைபடுத்தும் உறுதிமொழியோடு, பக்காத்தான் ஹராப்பான் ஒரு நிழல் வரவுசெலவுத் திட்டத்தை இன்று வெளியிட்டது.
2018-ல், ஜி.எஸ்.டி. 42 பில்லியன் ரிங்கிட் வருவாயைப் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படும் வேளை, ஹராப்பான் கொண்டுவரவிருக்கும் பழைய வரி முறை, 16.5 பில்லியன் ரிங்கிட் வருவாயை மட்டுமே ஈட்டித்தரும்.
ரிம 25.5 பில்லியன் பற்றாக்குறையை, பொருளாதாரத்தில் நுகர்வோர் மற்றும் வணிக நடவடிக்கைகளை அதிகரிப்பதன் வழி, கூட்டாட்சி வருவாய் மேலும் பெருகும் என்று ஹராப்பான் கூறுகிறது.
பெருநிறுவன வருமான வரி, கூடுதலாக RM2.81 பில்லியன், RM1.46 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள் மீதான சுங்க வரி (மோட்டார் வாகனங்கள் தவிர்த்து) மற்றும் சொத்து ஆதாயங்கள் வடிவில் RM1.46 பில்லியன் என சேகரிக்க முடியுமென அக்கூட்டணி நம்புகிறது.
ஜி.எஸ்.டி. அகற்றப்பட்டால், கார் விற்பனைகள் 20% அதிகரிக்கும், அதன்மூலம் இறக்குமதி வரி, மசோதா மற்றும் மோட்டார் வாகன உரிமம் ஆகியவற்றின் மூலம் RM1.93 பில்லியன் வருவாய் ஈட்ட முடியுமெனவும் அது நம்பிக்கை தெரிவித்தது.