பட்ஜெட் 2018: இன்று நாடாளுமன்றத்தில் 2018 பட்ஜெட்டை தாக்கல் செய்த பிரதமர் நஜிப், பிரிம் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ரொக்கம் ரிம1,200 வரையிலான நிதி உதவி நிலைநிறுத்தப்படும் என்றார்.
பிரிம் மூலம் 7 மில்லியன் மக்கள் பயன்பெற்றுள்ளனர். அதற்கு ரிம6.8 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
“ஆகவே, 2018 இல், அந்த 7 மில்லியன் மக்கள் இந்த உதவித் தொகையைத் தொடர்ந்து அனுபவிப்பார்கள். அதன் மிக உயர்ந்த அளவு ரிம1,200 ஆக இருக்கும்”, என்றாரவர்.
பிரிம் உதவித் தொகை கொள்கையைத் தொடர்ந்து விமர்சித்து வந்த எதிரணி இப்போது பல்டி அடித்திருப்பதாக நஜிப் கூறினார்.
நெடுஞ்சாலைகள் நிர்மாணிப்பதும், விமான நிலையங்களை மேம்படுத்துவும், பாலங்கள் கட்டுவதும் மட்டுமா பட்ஜெட் அறிவிப்புக்கள்? அவையாவும் நாட்டின் மேம்பாட்டுத் திட்டங்கள்.
அன்றாட வாழ்க்கைச் செலவினங்களை ஈடுகட்ட முடியாமல் ‘முழி’ பிதுங்கி தத்ததளிக்கும் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்த உணவுப் பொருள் விலைக்குறைப்பு, வீட்டு விலைக் குறைப்பு பற்றிய அறிவிப்பு எங்கே? இந்த அறிவிப்பு இல்லாத பட்ஜெட் எதற்கு?
மொத்தத்தில் கடந்த காலங்களைப் போலவே வாயாலே வடை சுட்ட பட்ஜெட் தான் இதுவும்