இரண்டு முஸ்லிம் போதகர்களுக்கு, ஒருவர் மலேசியர், சிங்கப்பூர் தடை விதித்துள்ளது. அவர்கள் இருவரும் சமயம் சார்ந்த கடற்பயணம் பற்றி பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இஸ்மாயில் மென்க் என்பவர் ஜிம்பாவியன்; மற்றவர் உஸ்தாஸ் போலிவுட் என்ற அழைக்கப்படும் மலேசியர் ஹஸ்லின் பாரிம்.
த ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் செய்திப்படி, உள்துறை அமைச்சு, சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் மற்றும் கடல் மற்றும் சிங்கப்பூர் துறைமுக நிருவாகம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பின்னர். இம்முடிவை எடுத்துள்ளது.
இதற்கு முன்னதாக, அவ்விருவரும் சிங்கப்பூரில் போதனை செய்வதற்கு பல்வகையான வேலை அனுமதி அட்டைக்காக செய்திருந்த மனுக்களை சிங்கப்பூர் நிராகரித்து விட்டது.
சிங்கப்பூரிலிருந்து செயல்படும் கடற்பயணக் கப்பல்களிலிருந்து சமயப் போதனை செய்வதன் வழி அவர்கள் தடையிலிருந்து தப்பிக்க முடியாது என்று உள்துறை அமைச்சின் அறிக்கை கூறுகிறது.
25 ஆவது இஸ்லாமிகுறுஸ் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி பத்துமலையைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.