ஏப்ரல் 2015-ல், பொருள், சேவை வரி அமல்படுத்தப்பட்டதில் இருந்து, கண்காணிக்கப்பட்ட 1,396 பொருள்களில், சுமார் 16% முதல் 26% வரை விலை குறைந்துள்ளது.
உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சு, பாஸ் – குபாங் கிரியான் எம்.பி. அஹ்மத் பாயாகி அட்டிகுலா எழுப்பிய கேள்விக்கு, எழுத்து பூர்வமாக இவ்வாறு பதிலளித்துள்ளது. பிரதமர் நஜிப் ரசாக் கூறியதுபோல், தற்போது சந்தையில் மலிவாக விற்கப்படும் பொருள்களின் சதவீதத்தை, அமைச்சு அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இருப்பினும், அந்த 300 பொருள்களின் பட்டியலை அமைச்சு வெளியிடவில்லை. பொருள்களின் விலை உயர்வுக்கு ஜி.எஸ்.டி. மட்டும் காரணமல்ல, மாறாக, நாணய மாற்று விகிதங்கள், பொருள்களின் உற்பத்தி, வானிலை மற்றும் எண்ணெய் விலை போன்றவையும் ஒரு பொருளின் விலையை நிர்ணயிப்பதாக அமைச்சு நினைவூட்டியது.
2015-ஆம் ஆண்டு மே மாதம், ஜிஎஸ்டி நடைமுறைபடுத்திய பின்னர், பொருள்களின் விலை வீழ்ச்சியை மக்கள் உணருவர் என்று துணை அமைச்சர் அஹ்மாட் மஸ்லான் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
எந்த பொருள் எந்த விலையில் குறைந்துள்ளது? விலைகள் இரண்டுமடங்காகி உள்ளது தான் உண்மை. ஜி எஸ் டீ -காரணம் சொல்லி விலைகள் ஏற்றப்பட்டுள்ளதே உண்மை. அக்மட் மஸ்லானின் கடையில் பொருட்கள் குறைந்த விலையில் விற்கிறான் போலும்- பொய்க்கார நாதாரி.
எதிர்வரும் தேர்தலில் விலைவாசி ஏற்றமும் அதனால் மக்கள் படும் அவதியும் தே.மு. அரசாங்கத்திற்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கும்.
மிக நல்லது! ஆனால் 600 பொருள்களின் விலை ஏறியிருக்கும்!