செந்தமிழ்ச் செல்வியின் குற்றச்சாட்டுகளை நஜிப்பும் ரோஸ்மாவும் மறுத்தனர்

 

பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சூருக்கு எதிராக காலஞ்சென்ற தனிப்பட்ட துப்பறிவாளர் பி. பாலசுப்ரமணியத்தின் துணைவியார் எ. செந்தமிழ்ச் செல்வி தொடர்ந்துள்ள வழக்கில் அவர்களுக்கு எதிராகக் கூறப்பட்ட்டுள்ள குற்றச்சாட்டுகளை நஜிப்பும் ரோஸ்மாவும் மறுத்தனர்.

கோரிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தனித்தனியாய் மறுக்கப்படுகின்றன என்று நஜிப்பும் ரோஸ்மாவும் அவர்களுடைய தற்காப்பு அறிக்கையில் கூறியுள்ளனர்.

அதன் அடிப்படையில், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யும்படி அவர்கள் மனு செய்தனர்.