பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல்-பிரௌன் மீது யுகேயில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கில் தமது தற்காப்பு வாதத்தை தாக்கல் செய்த கிளேர் அதில் மலேசிய வழக்குரைஞர்கள் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா சீனிவாசனின் பெயரை இழுத்துள்ளார்.
பாஸ் கட்சி பிரதமர் நஜிப்பிடமிருந்து ரிம90 மில்லியனைப் பெற்றது என்று கிளேர் எழுதி வெளியிட்டிருந்த கட்டுரையில் கூறினார். அந்தத் தகவலுக்கு ஆதாரம் அம்பிகா என்று கிளேர் எழுதியுள்ளார்.
மலேசியாவில் ஹாடியும் அவரது ஆதரவாளர்களும் தம்மீது தொடுத்திருக்கும் மும்முரமான ஆய்வுகள் கிளேரின் தற்காப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ள மிகக்கடுமையான வாதத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன என்றார் அம்பிகா.
கிளேர் தாக்கல் செய்துள்ள தற்காப்பு மற்றும் எதிர்க்கோரிக்கையில் இரண்டு பத்திகளுக்கு (அம்பிகா சம்பந்தப்பட்டவை) மேல், மொத்தம் 36, இருக்கின்றன.
அவற்றில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் அடங்கியுள்ளன. அவைதான் கவனத்திற்குரியவைகளாகும் என்று அம்பிகா இன்று மாலையில் விடுத்த அறிக்கையில் கூறினார்.