கிளேர் : நஜிப்புக்கு எதிரான வழக்கு வரைவு ஒன்றை கெவின் மொரைஸ் கொடுத்தார்

எம்.ஏ.சி.சி.-யின் துணை அரசு வழக்கறிஞர் கெவின் மொரைஸ், நஜிப்புக்கு எதிரான 1எம்டிபி தொடர்பான வழக்கு வரைவு ஒன்றை தனக்கு அனுப்பியதாக, சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல்-பிரௌன் கூறியுள்ளார்.

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், யுகேயில் அவருக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில், தமது தற்காப்பு வாதத்தை தாக்கல் செய்த அறிக்கையில் அவர் இந்தக் குற்றச்சாட்டை செய்துள்ளார்.

ஜூலை 27, 2015-ல், முன்னாள் அட்டர்னி ஜெனரல் அப்துல் கானி பட்டேல் , பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரு நாளுக்கு பிறகு, அந்த ஆவணம் கிடைக்கப்பெற்றதாக அவர் மேலும் கூறினார்.

“பிரதிவாதி (கிளேர்) நஜிப் மீது வழக்குத் தொடர, வழக்கு வரைவு மற்றும் திட்டமிடல் தொடர்பான தகவல் திரட்டல் மற்றும் கானி பட்டேல் பதவி நீக்கம் குறித்த தகவலையும் கெவின் மொரைசிடமிருந்து பெற்றார்,” என மலேசியாகினி பாதுகாப்பு அறிக்கையின் படி தெரியவருகிறது.

சுகாதார காரணங்களுக்காக, தலைமை நீதிபதி கானி பட்டேல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அந்த நேரத்தில் அவர் 1எம்டிபி விவகாரத்தை விசாரிக்கும் ஒரு பணிக்குழுவிற்குத் தலைமை தாங்கினார்.

அந்தப் பதவி நீக்கத்திற்குப் பிறகு, ஜூலை 30-ம் தேதி, எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனலிலிருந்து நஜிப்பின் தனிப்பட்ட கணக்கில் 42 மில்லியன் ரிங்கிட் சேர்க்கப்பட்டது தொடர்பில் நஜிப் மீது குற்றச்சாட்டி சரவாக் ரிப்போர்ட் ஒரு செய்தியை வெளியிட்டது.

எம்.ஏ.சி.சி.-யின் முன்னாள் ஆணையர் அபு காசிம் மொஹமட், 1எம்டிபி விசாரணையில் – எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனலின் RM42 மில்லியன் பரிமாற்றம் மற்றும் நஜிப்பின் கணக்கில் சேர்க்கப்பட்ட, சவுதி அரச பரம்பரையின் RM2.6 பில்லியன் நன்கொடையில் தொடர்பு கொண்டிருப்பதை மறுத்தார்.

மொரைஸ் முன்னாள் 1எம்டிபி துணை நிறுவனமான எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் குறித்த தகவல்களைக் கொடுத்ததாகவும், லண்டனில் அவரைச் சந்திக்க திட்டமிட்டதாகவும் கிளேர் கூறியுள்ளார்.

1எம்டிபி விசாரணை தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்னர், ஜூலை 2014-ல், கெவின் எம்.ஏ.சி.சி.-யிலிருந்து மாற்றப்பட்டார். அட்டர்னி ஜெனரல் அப்துல் கானி பட்டேல் தலைமையில் நடந்த எந்தவொரு சிறப்பு பணிக்குழு கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை.

“இந்த இரு விஷயங்களிலும், கெவினின் ஆலோசனையை எம்.ஏ.சி.சி. ஒருபோதும் கேட்டதில்லை என்று நாங்கள் பதிவு செய்ய விரும்புகிறோம்.

“ஆகவே, கெவினால் முடியாது, 1எம்டிபி அல்லது பிரதமர் தொடர்பாக குற்றச்சாட்டு ஆவணங்கள் எதையும் தயாரிக்க அவரால் முடியாது.

“எந்த முரண்பாடான அறிக்கையும் தவறானது,” என்று அவர் கூறினார்.

1எம்டிபி விசாரணையில் மோரைஸ் தொடர்பு கொள்ளவில்லை என்று, கானிக்குப் பின்னர் பதவியேற்ற, முகம்மது அபண்டி அலியும் தெரிவித்துள்ளார்.

நஜிப்க்கு எதிரான வழக்கு வரைவுகளை நிராகரித்த அபாண்டி, அது பொய் என்றும் கூறிய அவர், RM2.6 பில்லியன் மற்றும் எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் வழக்குகளில் எந்த தவறான நடவடிக்கையும் இல்லை என, நஜிப்பை விடுதலை செய்தார்.

நஜிப் நிர்வாகத்தை கவிழ்க்க, கிளேர் மூலம் சதித்திட்ட்டம் தீட்டியதாக சரவாக் ரிப்போர்ட் மீது குற்றம் சாட்டப்பட்டது.

செப்டம்பர் 2015-ல், மோரைஸ் கொல்லப்பட்டார். செப்டம்பர் 4-ல், அவர் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகின. இரண்டு வாரங்கள் கழித்து , செப்டம்பர் 16- ம் திகதி, கான்கிரீட் கொள்கலன்களில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவரைக் கொலை செய்ததாக ஆறு ஆடவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக நோயியல் நிபுணர் ஒருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டு, வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

மோரைஸ் அந்த நோயியல் நிபுணருக்கு எதிரான ஒரு ஊழல் வழக்கில், வழக்கறிஞராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.