எப்ஜிவி (FGV) ஊழல் 1எம்டிபியைவிட மிகப் பெரியது, ஜோமோ கூறுகிறார்

 

பெல்டா குளோபல் வெண்சர்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எப்ஜிவி) ஊழல் 1எம்டிபியைச் சுற்றியிருக்கும் ஊழலைவிட மிகப் பெரியது என்று பொருளாதார வல்லுனர் ஜோமோ  குவாமெ சுந்தரம் கூறுகிறார்.

எதிரணியிலிருக்கும் ஒவ்வொருவரும் 1எம்டிபியின் மீது கவனம் செலுத்தும் போக்கைக் கொண்டுள்ளனர். ஆனால், பல முட்டாள்தனமான நடத்தைகள் நடைபெற்றுக்குக் கொண்டிருக்கின்றன. இவை எல்லாம் 1எம்டிபி பற்றியது மட்டுமல்ல என்றாரவர்.

எனது கருத்தில் அதிகமான மக்களைப் பாதிக்கும் மிகப் பெரிய ஊழ.ல் எப்ஜிவி என்று அவர் இன்று பங்சாரில் நடந்த “எதிர்காலத்தை எதிர்பார்த்தல்: மலேசியா ஜிஇக்கு அப்பால்”, என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கூறினார்.

2012 ஆம் ஆண்டு மத்தியில் பெல்டா குடியேற்றக்காரர்கள் உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஐபிஒவில் (IPO பங்குச் சந்தை தொடக்கப் பங்கு ஒதுக்கீட்டில்) பங்கேற்றனர். ஆனால் அந்தப் பங்குகளின் விலை சரிவு கண்டு தற்போதைய சந்தை விலை அவற்றின் தொடக்க விலையில் 40 விழுக்காட்டிற்கும் குறைவாக இருக்கிறது என்று ஜோமோ கூறினார்.

இதற்கு ஒரு தீர்வு காணும் நடவடிக்கையாக பிரதமர் நஜிப் பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு மறுநடவு மானியம் என்ற பெயரில் ரிம5,000 இலஞ்சம் கொடுப்பதில் இறங்கியதோடு வங்கியில் அவர்கள் பெற்றிருக்கும் கடன்களை எல்லாம் வசூலிக்க வேண்டாம் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது என்றார் ஜோமோ.

“இந்தப் பிரச்சனை எவ்வளவு உணர்ச்சிகரமானது என்பதை இது வலியுறுத்துகிறது என்றாரவர்.

இதுமட்டுமல்ல. மலேசியாவில் 1எம்டிபி மற்றும் எப்ஜிவி, நெகிரி செம்பிலான் காட்கோ பிரச்சனை உட்பட, ஆகியவற்றுடன் இன்னும் பல ஊழல்கள் இருக்கின்றன என்பதை அவர் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சிகளின் தகுதியின்மை

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்கத்தான் ஹரப்பானின் வியூக இயக்குனர் சுல்கிப்ளி அஹமட் எதிரணி 1எம்டிபி விவகாரத்தில் மட்டும் கவனம் செலுத்துகிறது என்பதை மறுத்தார்.

பக்கத்தான் ஹரப்பான் வாழ்க்கைச் செலவினம், ஜிஎஸ்டி, மாரா ஊழல், எப்ஜிவி உட்பட, மற்றும் பல விவகாரங்களில் கவனம் செலுத்துகிறது என்று கூறினார்.

ஒரு எப்ஜிவி பங்கின் தொடக்கவிலை ரிம4.55. இப்போது அதன் விலை ரிம1.83 என்றாரவர்.

எப்ஜிவி சம்பந்தப்பட்ட விவகாரத்தில் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் மேற்கொண்டுள்ள விசாரணை பற்றியும் அவர் கூறினார்.

இப்போது இருக்கும் சூழ்நிலை அப்படியே தொடர்ந்தால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன் வலுவடையும் சாத்தியம் இருப்பதாக ஜோமே தெரிவித்தார்.

பின், அம்னோ அல்லது பிரதமர் மிக வலுவாக இருப்பதாக அர்த்தமில்லை. மாறாக. அது எதிரணியில் காணப்படும் தகுதியின்மையான சூழ்நிலை ஆகும் என்று கூறிய ஜோமோ, இது முக்கோண போட்டிக்கு வழிவகுக்கும் என்பதோடு ஊழல் மிக்க இந்த அரசாங்கம் மீண்டும் வலுவான அரசியல் அதிகாரத்துடன் ஆட்சியில் அமரும் என்றார்.

துரதிருஷ்டவசமாக, இதைத்தான், எதிலும் எல்லாவற்றிலும் மிக மோசமானவற்றை, நாம் எதிர்காலத்தில் சந்திக்கப் போகிறோம் என்றார் ஜோமோ.