வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் சேர அனுமதிக்கப்பட வேண்டும் ஏனென்றால் அது இறுதியில் மலேசியர்களுக்குப் பயன் அளிக்கும் என்று கஜனாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் முகமட் ஷெரிப் முகமட் காசிம் கூறினார்.
வெலிநாட்டுத் தொழிலாளர்கள் தொழி/ர்சங்கத்தில் சேர்ந்தால், அவர்களின் சம்பளம் உயரும்.
அவர்களின் சம்பளம் உயர்ந்தால். முதலாளிகளுக்கு மலிவான தொழிலாளர்களைத் தேடுவதற்கான ஆர்வம் இருக்காது என்றாரவர்.
“அவர்களின் (வெளிநாட்டுத் தொழிலாளர்களின்) சம்பளம் உயர்ந்தால், அது அனைத்து தொழிலாளர்களுக்கும் நல்லது என்று நான் நினைக்கிறேன்”, என்று ஷெரிப் நேற்று பங்சாரில் நடந்த ஒரு கலந்துரையாடலில் கூறினார்.
மலேசியாவில் குறைந்த சம்பளம், குறிப்பாக கீழ்மட்ட நிலை வேலைகளுக்கு, கொடுக்கப்படுவதற்கான காரணம் அதிகமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பி இருப்பதாகும் என்று கூறிய அவர், குறைவான சம்பளம், குறிப்பாக அடிமட்ட நிலையிலான வேலைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம், ஒட்டுமொத்த சம்பளக் கட்டமைப்பையே சாய்த்துவிடும் என்றார்.
குறைந்த வருமானம் பெரும் அடிமட்ட தொழிலாளர்களின் செலவுக்கான வருமானம் குறைவாக இருப்பதற்கு இது ஒரு பெருமளவிலான காரணமாக இருக்கிறது என்று ஜி25 குழுவின் உறுப்பினருமான ஷெரிப் கூறினார்.
எதிரியே தொழிற்சங்கள்தான், ஜோமோ
அந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பொருளியலர் ஜோமோ குவாமே கென்யாட்டா சுந்தரம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் சேர அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஷெரிப்பின் கருத்தோடு உடன்பட்டிருந்தார்.
ஆனால், இக்கருத்துக்கு பலரின் சீரிய கவனம் கிடைக்கும் அவர் நம்பவில்லை.
1980களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வரத் தொடங்கிய போது, அவர்களைத் தொழிற்சங்க உறுப்பினர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது தமக்கு ஞாபகம் இருக்கிறது என்று கூறிய ஜோமோ, அதை அப்போதிருந்த பல தொழிற்சங்கள், டிஎபி மற்றும் பலர் எதிர்த்தனர். அந்த நிலைப்பாட்டிலிருந்து உண்மையில் அதிகமான மாற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை என்றார்.
அரசியல் நடைமுறை மற்றும் தொழிற்சங்க உலகத்திற்கு வெளியிலிருக்கும் தம்மைப் போன்றுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் சேர வேண்டும் என்பதை ஆதரிப்பது சுலபம். ஆனால் அது அவ்வளவு சாதாரணமான காரியமல்ல என்றார்.
இந்தப் பிரச்சனை வெளிநாட்டுத் தொழிலாளர்களை மட்டும் பாதிக்கும் ஒன்றல்ல, ஏனென்றால் தொழிற்சங்கங்களில் அங்கத்துவம் மிகக் குறைவாக இருக்கிறது.
மொத்தத் தொழிலாளர்களில், அநேகமாக 10 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே உறுப்பியம் பெற்றுள்ளனர்.
“அவற்றில் பெரும்பாலானவை அரசு ஊழியர்கள் சங்கங்கள். தனியார்துறை மிக மிக தொழிற்சங்கமற்றதாக இருக்கிறது”, என்றார் ஜோமோ.