ஜொகூர் காற்பந்து குழுவான, ஜொகூர் டாருல் தக்ஷிம் (ஜேடிதி), மலேசிய கோப்பையை வென்று பெற்ற வெகுமதி பணத்தை, பினாங்கு வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளதாக தெரிகிறது.
கடந்த சனிக்கிழமை, 2017 மலேசியக் கிண்ணக் காற்பந்து போட்டியில், கெடாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று, ஜேடிதி மலேசியக் கோப்பையை வாகைசூடியது.
ஜேடிதி-யின் தலைவர் துங்கு துன் அமினா பிந்தி சுல்தான் இப்ராஹிம், ‘சௌதர்ன் டைகர்ஸ்’ முகநூல் பக்கத்தின் வாயிலாக, இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜேடிதி-யின் கொள்கை, பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையானவர்களுக்கும் உதவி மற்றும் நன்கொடை வழங்குவது என்று ஜொகூர் தெங்கு மக்கோத்தா கூறியுள்ளதற்கு இணங்க, பஹாங் மற்றும் கிளாந்தான் வெள்ள நிவாரணப் பணிகளுக்கும், சபா நிலநடுக்க பேரிடருக்கும், ஜேடிதி இதற்கு முன்னர் நிதி வழங்கி உதவியுள்ளது.”
“ஆக, இது போன்ற காரியங்களை நாங்கள் தொடர்ந்து செய்யவுள்ளோம். இம்முறை நாங்கள், வென்ற மலேசியக் கிண்ணப் பணத்தைப் பினாங்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்க ஜேடிதி கிளப்பும் அதன் விளையாட்டாளர்களும் முடிவு செய்துள்ளனர்,” என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.