அருள் கந்தாவைச் சேர்த்தால், கஜனாவுக்கு போராபத்து, புவா கூறுகிறார்

 

கஜனா நேசனல் பெர்ஹாட், அஸ்மான் மொக்தாருக்குப் பதிலாக அருள் கந்தா கந்தசாமியை அதன் நிருவாக இயக்குனராக வேலைக்கு அமர்த்தினால் அது கஜனாவுக்கு ஒட்டுமொத்தப் பேராபத்தாகும் என்று பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா கூறுகிறார்.

சிங்கப்பூர் ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் அஸ்மானில் இடத்தில் நியமிக்கப்படுவதற்கான நான்கு வேட்பாளர்களில் கந்தாவும் ஒருவர் என்று கூறப்படுள்ளது. அது குறித்து கருத்துரைத்த புவா, 1எம்டிபியில் அவரது சேவை கறைபடிந்ததாக இருந்துள்ளது என்றார்.

பல சீர்திருத்தங்கள் பற்றி கூறப்பட்டிருந்தாலும்1எம்டிபி விவாகாரம் தீர்ந்தபாடில்லை. அது இன்னும் பல பில்லியன்கள் கடனில் இருக்கிறது. பண்டார் மலேசியா இன்னும் விற்கப்படவில்லை.

பண்டார் மலேசியா செண்ட். பெர்ஹாட்டிலிருந்து அருள் கந்தா நிதி அமைச்சால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார் என்பது நடைமுறையில் எல்லாவற்றையும் உறுதிப்படுத்துகிறது என்றார் புவா.