பினாங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண நிலையங்களுக்கு அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,294 க்கு உயர்வு கண்டுள்ளது.
போலீஸ் வெள்ள நடவடிக்கை அறையின் பேச்சாளர் இன்று மதியம் அளவில் பாதிக்கப்பட்டவர்கள் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களிலுள்ள 50 நிவாரண நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
இன்று காலையில் செபராங் பிறை செலாத்தானில் மூடப்பட்ட பல சாலைகள் இன்னும் மூடப்பட்டிருக்கின்றன, ஜாலான் லாஹார் ஊய்-சுங்கை டூவா, லாஹார் ஊய் – பாடாங் மெநோரா, ஜாலான் பொகோக் தம்பாங் மற்றும் ஜாலான் பாடாங் தொன்சன் ஆகியவையும் அவற்றில் அடங்கும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் வெள்ளம் வடியத் தொடங்கி விட்டது என்றும் வீடுகளிலிருந்து வெளியேறிவர்கள் வீட்டுத் திரும்புகின்றனர் என்றும் அப்பேச்சாளர் கூறினார்.
மாநிலத்தின் வரலாற்றில் மிக மோசமானது என்று கூறப்படும் இந்த வெள்ளத்தில் இன்று வரையில் எழுவர் இறந்துள்ளனர்.