சிலாங்கூர் மாநில சட்டமன்றம் மகாதிர் “பூகிஸ்” என்று கூறியிருந்தது பற்றி பாரிசான் நேசனல் சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிதலை நிராகரித்ததைத் தொடர்ந்து, அவர்கள் நாளை சிலாங்கூர் சுல்தானிடம் ஒரு மனுவை அளிக்கவிருக்கின்றனர்.
மகாதிரை கண்டிக்க சிலாங்கூர் அரண்மனை எடுத்திருந்த முடிவை பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரிப்பதாக அந்த மனுவில் கூறப்படும் என்று குவாங் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சூகுர் இட்ருஸ் தெரிவித்தார்.
பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் விவாதிக்க மேற்கொண்ட முயற்சியும் அந்த மனுவில் கூறப்படும் என்று கூறிய சூகுர், “நான் முன்வைத்த முன்மொழிதலை அவைத் தலைவர் நிராகரித்தது குறித்து நாங்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம்.
“பக்கத்தான் ஹரப்பான் தலைவர் பூகிஸ் சமூகத்தினரை அவமத்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம்”, என்றாரவர்.
அரண்மனைக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நாங்கள் தாக்கல் செய்த முன்மொழிதல் நிராகரிக்கப்பட்டது பற்றிய முழு விபரம் அடங்கிய மனுவை ஆட்சியாளரிடம் நாளை அளிப்போம் என்று சூகுர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.