புத்ரா ஜெயாவின் பிரிம்மைவிட (BR1M) சிலாங்கூர் மாநிலத்தின் காசே இபு ஸ்மார்ட் சிலாங்கூர் (KISS) மிகச் சிறந்ததாக விளங்கும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் டாரோயா அல்வி கூறுகிறார்.
கிஸ்சிற்கு தகுதி பெறுபவர்கள் உணவுப் பொருள்கள் மற்றும் பள்ளி உடுப்புகளுக்கு ரிம200 பெறுவர், வருடத்திற்கு ரிம2,400 ஆகும்.
ஆனால், பிரிம்மின்கீழ் மிக அதிகமாகக் கொடுக்கப்படுவது ரிம1,200 மட்டுமே.
பிரிம்மைவிட கிஸ் மிகச் சிறந்தது என்பதை தாம் வலியுறுத்த விரும்புவதாக கூறிய அவர், தாய்மார்கள் கூடுதலாக ஒரு மாதத்திற்கு ரிம200 செலவு செய்ய முடியும், அது ஓராண்டிற்கு ரிம2,400 ஆகும், பிரிம்மின் கீழ் ஓர் ஆண்டிற்கு ரிம1,200 மட்டுமே.
பிரிம் குடும்பத் தலைவரிடம் கொடுக்கப்படுகிறது, தாய்மார்களிடம் இல்லை. தாய்மார்களிடம் இந்த உதவித் தொகை முழுமையாகச் சென்றடைவதில்லை என்று நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம், ஏனென்றால் அது தந்தைமார்களால் செலவிடப்படுகிறது என்று டாரோயா சட்டமன்றத்தில் கூறினார்.
பிஎன்-உலுபெர்ணம் சட்டமன்ற உறுப்பினர் ரோஸ்னி சோஹார் பிரிம்1க்கும் கிஸ்சுக்கும் இடையிலான ஒத்த தன்மைகள் என்ன என்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செமந்தா சட்டமன்ற உறுப்பினரான டாரோயா, கிஸ் தாய்மார்களுக்கு உதவுவதோடுமட்டுமில்லமல் அது குடும்பச் செலவினங்களில் தாய்மார்களின் பங்கை மாநில அரசு அங்கீகரிப்பதைக் காட்டுகிறது என்றார்.