தலைமை நீதிபதி நியமனம்: உச்ச நீதிமன்றத்திற்கு மலேசியன் பாரின் ஆறு கேள்விகள்

 

கட்டாயமாக ஓய்வு பெறும் வயதான 66 வருடங்கள் 6 மாதத்தைக் கடந்த பின்னர் நீதிபதி முகமட் ராவுஸ் ஷரிப் தலைமை நீதிபதியாகவும், நீதிபதி சுல்கெப்ளி அஹமட் மக்னினுடின் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவராகவும் நியமிக்கப்பட்டது சம்பந்தமாக மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் (பார்) பெடரல் நீதிமன்றத்திடம் ஆறு கேள்விகளை முன்வைக்க விரும்புகிறது.

வழக்குரைகள் மன்றத்தின் மனுவைத் தள்ளுபடி செய்வதற்கான மலேசிய சட்டத்துறை தலைவரின் (எஜி) அலுவலகம் தாக்கல் செய்துள்ளதாக பாரின் வழக்குரைஞர்கள் அம்பிகா மற்றும் ஸ்டீவன் திரு ஆகியோர் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் கூறினர்.

தங்களுடைய மற்றும் எஜி அலுவலகத்தின் மனுக்கள் இரண்டும் டிசம்பர் 19 இல் இங்கு விசாரணைக்கு வரும் என்று அம்பிகா கூறினார்.

நீதிபதிகள் ராவுஸ், சுல்கிப்ளி மற்றும் முன்னாள் தலைமை நீதிபதி ஆகியோரை எஜி அலுவலகம் பிரதிநிதிக்கிறது.

மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் எழுப்பியுள்ள ஆறு கேள்விகளும் சம்பந்தப்பட்ட நீதிபதிகளின் பதவிகளை நீட்டிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பெடரல் அரசமைப்புச் சட்டங்களுக்கு முரணானதா?,அப்படியென்றால், செல்லுபடியாகதா?, என்பதாகும்.