தேசிய நல்லிணக்கச் சட்டத்திற்கான திட்டம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது!

 

 

நாடாளுமன்றம்: திட்டமிடப்பட்டிருந்த தேசிய நல்லிணக்கச் சட்டம், இத்திட்டம் ஐந்து ஆண்டுகளுக்குமுன் அறிவிக்கப்பட்டது, இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

முன்மொழியப்பட்ட இச்சட்டம் இன்னும் கைவிடப்படவில்லை. அது இன்னும் ஆராயப்பட்டு வருகிறது என்று பிரதமர்துறை அமைச்சர் ஜோசெப் குருப் கூறினார்.

அதற்கு நேரம் தேவைப்படுகிறது, ஏனென்றால் நாங்கள் தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றத்தின் பெருந்திட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது என்றாரவர்.

நிந்தனைச் சட்டம் 1948 க்கு மாற்றாக முன்மொழியப்பட்ட இச்சட்டம் என்னவாயிற்று என்று பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜாஹிட் யூசுப் ராவா எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் ஜோசெப் இவ்வாறு பதில் அளித்தார்.