நியுஜென் கட்சி ஹரப்பானில் சேர்வதற்காக மகாதிரை சந்தித்தது

 

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஹரப்பானில் இணைவதற்கான அதன் விருப்பத்தை நியுஜென் கட்சி இன்று ஹரப்பான் தலைவர் மகாதிரிடம் கொண்டு சென்றது.

ஹரப்பானின் ஐந்தாவது உறுப்பினராக சேரும் அதன் விருப்பத்தை மகாதிரிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க இந்தச் சந்திப்பு நடத்தப்பட்டது. “நாங்கள் எங்களுடைய நோக்கங்களைத் தெரிவித்ததோடு, ஏன் ஹரப்பான் எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்பதையும் கூறியதாக அக்கட்சியின் தலைவரான எ. இராஜரெத்தினம் கோலாலம்பூரில் இன்று மதியம் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மகாதிர் – நியுஜென் கட்சி சந்திப்பு இன்று காலையில் புத்ரா ஜெயாவில் நடைபெற்றது.

நியுஜென் கட்சி 15 விழுக்காட்டு இந்தியர்களை ஹரப்பான் பக்கம் திருப்ப முடியும் என்று நம்புகிறது என்றாரவர்.

இச்சந்திப்பின் போது, சிறுபான்மையினருக்கு, இந்தியர்கள் உட்பட, ஒரு கட்சி தேவைப்படுகிறது என்பதை மகாதிர் ஏற்றுக்கொண்டதாக இராஜரெத்தினம் தெரிவித்தார்.