இன்று நடைபெற்ற டிஎபியின் மத்தியச் செயற்குழுவிற்கான மறுதேர்தலில் லிம் குவான் எங் அவரது தலைமைச் செயலாளர் பதவியை நிலைநிறுத்திக் கொண்டார்.
கர்பால் சிங் காலமான பின்னர் இடைக்கால தலைவராக இருந்து வந்த டான் கோக் வா, தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டிஎபியின் சட்டப் பிரிவு தலைவராக இருந்த கோபிந்த சிங் டியோ, துணைத் தலைவராக தேர்வு பெற்றார்.
கிட்டத்தட்ட அனைத்து பதவிகளுக்கும் அப்பதவியிலிருந்தவர்களே தேர்வு பெற்றுள்ளனர். அந்தோனி லோக், தேசிய அமைப்புச் செயலாளர், போங் குய் லுன், தேசிய பொருளாளர், டோனி புவா, தேசியப் பரப்புரைச் செயலாளர், லியு சின் தோங், அரசியல் கல்வி இயக்குனர், மற்றும் லிம் கிட் சியாங், டிஎபியின் நாடாளுமன்ற தலைவர்.
தியோ நீ சிங், அனைத்துலக செயலாளர்; வி. சிவகுமார், தெரசா கோ மற்றும் எங்கா கோர் மிங் ஆகியோர் துணைத் தலைமைச் செயலாளர்கள்.
உதவித் தலைவர்கள் – சோங் சியன் ஜென், சோவ் கோன் இயோ, எம். குலசேகரன், தெங்கு ஸுல்புரி ஷா ராஜா புஜி, ஸ்டீபன் வோங்.
செயற்குழு உறுப்பினர்கள் – சோங் எங், ரோனி லியு, தெங் சாங் கிம், ஜென்னி லாசிம்பாங், ஜோன் பிரையன், வோங் கா வோ மற்றும் ஹன்னா இயோ.
மன்றங்களின் பதிவாளர் டிஎபி அதன் மத்தியச் செயற்குழுவிற்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று இந்த மறுதேர்தல் நடத்தப்பட்டது.