குறைபாடுள்ள பஹசா மலேசியா?, அபராதம் ரிம1,000!

 

 

பஹசா மலேசியாவை சரியாகப் பயன்படுத்தத் தவறினால், ஓன்லைன் விளம்பரங்களில்கூட, விரைவில் ரிம1,000 வரையிலான அபராதம் கட்ட வேண்டிவரும், இதற்காக தேசியமொழிச் சட்டம் 1963 மற்றும் கல்விச் சட்டம் 1996 ஆகியவற்றுக்கு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவிருக்கும் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால்.

தேவான் பஹசா மற்றும் புஸ்தகாவால் (டிபிபி) அமல்படுத்தப்படும் இந்த நடவடிக்கைக்கு கொள்கை அளவில் புத்ரா ஜெயா ஒப்புக்கொண்டுள்ளதாக பெயர் குறிப்பிடாத நம்பத்தகுந்த வட்டாரத்தை மேற்கோள் காட்டி சீனமொழி நாளிதழான நன்யாங் சியாங் பாவ் கூறுகிறது.

அந்த வட்டாரத்தின் தகவல்படி, இக்கருத்து துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடியின் தலைமையிலான ஓர் அமைச்சரவை சிறப்புக் குழுவால் விவாதிக்கப்படும் என்றும், அதற்கான ஒப்புதல் கிடைத்தால் இதை டிபிபி அமல்படுத்துவதற்கு வகைசெய்யும் சட்டத் திருத்தத்தை கல்வி அமைச்சு தாக்கல் செய்யும்.

டிபிபியின் தலைமை இயக்குனர் அப்துல் அட்சிஸ் அபாஸை அந்த நாளிதழ் தொடர்பு கொண்ட போது, பஹசா மலேசியாவை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை டிபிபிக்கு அளிக்கும் ஆலோசனையை அரசாங்கம் தெரிவித்ததாக அவர் கூறினார்.